‘ ஆஸ்திரேலிய ஆவணப் படம் குறித்து கருத்துரைக்குமாறு கேட்டதற்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வழக்குரைஞர்களில் ஒருவரான முகம்மட் ஹபாரிசாம் ஹருன் கருத்துரைக்க மறுத்தார்.
“அதை நான் இன்னும் பார்க்கவில்லை, அதனால் கருத்துரைப்பதற்கில்லை”, என்றார்.
அவருடைய சகாவான எம்.ரேஸா ஹசான் -இவரும் நஜிப்பின் வழக்குரைஞர்தான்- படம் பார்க்கும்போதே தூங்கி விட்டதாகக் கூறினார்.
“20வது நிமிடத்துக்குப் பிறகு தூங்கி விட்டேன். அது கற்பனைமிக்க CSI நாடகம்போல் இருந்தது”, என்றார். CSI என்பது குற்றச் செயல்களைப் புலன் விசாரணை செய்யும் விறுவிறுப்பான ஒரு தொலைக்காட்சி நாடகம்.
‘State of Fear: Murder and Money in Malaysia’ என்ற அந்த ஆஸ்திரேலிய ஆவணப் படம் ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழக(ஏபிசி) தொலைக்காட்சியில் திங்கள்கிழமை ஒலியேறியது. இணையத்தளத்திலும் அதைக் காணலாம்.
நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு என்று கூறப்பட்டு அதில் அடங்கிய விவரங்களை எல்லாம் அது காண்பிக்கிறது. ‘உயர் மட்ட வட்டாரம்’ ஒன்று அத்தகவல்களை வழங்கியதாம்.
இம்மாதத் தொடக்கத்தில், அந்தப் படத் தயாரிப்பில் சம்பந்தப்பட்ட செய்தியாளர் லிண்டன் பெஸ்ஸரும் படப்பிடிப்பாளர் லூயி எரோக்லு-வும் நஜிப்பை அணுகி அவரது வங்கிக் கணக்குப் பற்றிக் கேள்வி கேட்க முனைந்தபோது கைது செய்யப்பட்டு மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.
ஹா ஹா ஹா ஹா
உண்மைக்கு எங்கே மதிப்பு இருக்கிறது? இதிலிருந்து தெரிய வில்லையா எம்மாதிரியான ஜென்மங்கள் இவனைப்போன்றவர்கள். எனினும் இது ஆச்சரியம் இல்லையே.