சவூதி அராபிய இளவரசர் ஒருவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் யுஎஸ் $375 மில்லியனைக் கொடுத்து விருப்பம்போல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். இளவரசர் சவுட் அப்துல் அசீஸ் மஜிட் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று இதைத் தெரிவிக்கிறது.
2011, நவம்பர் 1 எனத் தேதியிடப்பட்ட அக்கடிதம், அப்பணத்தை “இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படையில் நீங்கள்(நஜிப்) மலேசியாவை ஆட்சி செய்து வருவற்கு” அங்கீகாரமாக வழங்கப்படும் “அன்பளிப்பு” என்று குறிப்பிட்டது.
“அன்பளிப்பை உங்கள் விருப்பபடி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் செயல்பாடுகள் இஸ்லாத்தைத் தொடர்ந்து மேலோங்கச் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
“இது உலகில் இஸ்லாத்தின் மேம்பாட்டுக்காக என்னுடைய சிறு பங்களிப்பு”, என அக்கடிதம் கூறிற்று. கடிதத்தை ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் வெளியிட்டது.


























அன்று வெளிவராத கடிதம் இன்று வெளிவந்தது எப்படி? புதியதாக தயாரித்ததோ? நல்ல இளவரசர்!. நன்கொடையால் நாசமா போன நாடு!.