“Mr X” குறியீட்டு வங்கிக் கணக்கிலிருந்து பிரதமர் செய்ததாக கூறப்படும் செலவுகள்

 

Mr Xபிரதமர் நஜிப்புக்குச் சொந்தமானது என்று கூறப்படும் அம்பேங் வங்கிக் கணக்கிலிருந்து மில்லியன்கணக்கான ரிங்கிட்கள் நகைகள், விடுமுறைகள், கார்கள் மற்றும் அரசியல் பரப்புரைகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா ஒலிபரப்பு நிலையம் (எபிசி) வெளியிட்ட அறிக்கையில் அம்பேங்கில் “Mr X” என்ற குறியீட்டுப் பெயரில் வைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணத்திற்கான விபரங்கள் கூறப்பட்டுள்ளன. அக்கணக்கு பிரதமர் நஜிப்புக்குச் சொந்தமானது என்று அது கூறிக்கொண்டுள்ளது.

வங்கிக் கணக்குகளை எபிசியின் ‘போர் கோர்னர்ஸ்’ செய்தியாளர்கள் பெற்றதாக அந்த எபிசி அறிக்கை கூறுகிறது. ஆனால், அவை எப்படி கிடைத்தன என்பது தெரிவிக்கப்படவில்லை.

செலவிடப்பட்ட விபரங்கள்:

நகைகள்: ரிம3.2 மில்லியன் (பிளேட்டினம் மற்றும் விசா கடன் அட்டைகள் வழியாக பணம் செலுத்தப்பட்டது.

அரசியல் பரப்புரைகள்: ரிம24 மில்லியன் சோலார் சயின் செண்ட். பெர்ஹாட்.டிற்கு கொடுக்கப்பட்டது.

ஊடக மற்றும் விளம்பரங்களுக்கு கொடுக்கப்பட்டது: தொகை வெளியிடப்படவில்லை.

சரவாக் எஸ்யுபிபி மற்றும் எல்டிபி ஆகிய கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டது. தொகை வெளியிடப்படவில்லை.

ராஹா அறவாரியம்: ரிம7.5 மில்லியன்.

தங்கும் விடுதிக்கான செலவு: ரிம395, 782.40 – ஷாங்ரிலா ஹோட்டல், கோலாலம்பூர்..

பொருள்கள் வாங்கியது: ரிம360,000 துணி விற்பனை சில்லறை வியாபார நிறுவனம் ஜேகல் டிரேடிங்கிற்கு கொடுக்கப்பட்டது.

விடுமுறை: ரிம178,000 சுற்றுப்பயண ஏஜென்சி டு ஒன் ஹோலிடேய்ஸ் மலேசியாவுக்கு கொடுக்கப்பட்டது.

சொகுசுக் கார்கள்: ரிம167,959.50 சொகுசுக் கார் விற்பனையாளர் – சிக்நேச்சர் எக்சோட்டிக் கார்கள் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது.

வணிகர்கள், கல்விமான்கள் மற்றும் வழக்குரைஞர்கள்: தொகை வெளியயிடப்படவில்லை.

இவற்றுக்கான எதிர்வினையைப் பெறுவதற்காக பிரதமர் அலுவலகம் மற்றும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்துட்டன் மலேசியாகினி தொடர்பு கொண்டுள்ளது.