மலேசிய அரவாணிக்கு அனைத்துலக விருது

nishaஅரவாணிகளின் உரிமைகளுக்காக  போராடும்  நிஷா  ஆயுப்புக்கு 2016  அனைத்துலக  வீரப்  பெண்மணி  விருது  வழங்கப்பட்டுள்ளது.

நேற்று   அமெரிக்கத்  தலைநகர் வாஷிங்டனில்  அமெரிக்க  வெளியுறவு  அமைச்சர்  ஜான்  கெர்ரியால்  வழங்கப்பட்ட  அவ்விருதைப்  பெற்றுக்கொள்ள    உலகின்  பல்வேறு  நாடுகளிலிருந்தும்  வந்திருந்த  14 பேரில்  நிஷாவும்  ஒருவர்.

அவ்விருது,  அமைதிக்காகவும் நீதிக்காகவும்  மனித  உரிமைகளுக்காகவும்  ஆண்-பெண்  சமத்துவத்துக்காகவும்  பெண்களின்  மேம்பாட்டுக்காகவும்  போராடுவதில்  “அசாத்தியமான  துணிச்சலை”  வெளிப்படுத்தும்  பெண்களுக்கு  வழங்கப்படுகிறது.

2007-இல்  தொடங்கப்பட்ட  அவ்விருதை  இதுவரை உலகின்  பல  நாடுகளையும்  சேர்ந்த  100பேர்  பெற்றுள்ளனர்.

“அமெரிக்காவிடமிருந்து இதுபோன்ற  அனைத்துலக  அங்கீகாரத்தைப்  பெறுவது  உண்மையிலேயே  ஒரு  கெளரவம்தான்”, என  நிஷா  தன்  முகநூல்  பக்கத்தில்  குறிப்பிட்டிருந்ந்தார்.