சவூதி இளவரசர் ஒருவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் யுஎஸ்$375 மில்லியனை அன்பளிப்பாகக் கொடுத்தார் என்பது உண்மைதானா என்பதை முதலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் துணை அமைச்சர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் கூறினார்.
“அது உண்மையா, பொய்யா என்பது தெரியவில்லை.
“இது நஜிப்மீது அதிருப்தி கொண்டவர்கள் கண்ணை மூடிக்கொண்டு சொன்ன குற்றச்சாட்டாக இருக்கலாம்”, என்றவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
யுஎஸ்375 மில்லியன் அன்பளிப்பு பற்றி நஜிப்கூட இதுவரை குறிப்பிட்டதில்லை என தாஜுடின் சொன்னார்.
அன்பளிப்புப் பற்றிக் குறிப்பிடும் சவூதி இளவரசரின் கடிதமொன்றை ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் வெளியிட்டிருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது தாஜுடின் இவ்வாறு கூறினார்.
பாவம் திருடனுக்குத் திருடன விவரம் தெரியலை போலிருக்கு!
ஆமாம்டா எப்போதுடா நீங்க உண்மை சொல்லி இருக்கீங்க? பொய்யும் பித்தலாட்டம் தானே உங்களின் திறமை– எப்படிடா நீங்க எல்லாம் நிம்மதியா தூங்குறீங்க?
ஆமாம்! சவூதி இளவரசர், நஜிப் மீது அதிருப்தி கொண்டவராகக் கூட இருக்கலாம்!
அப்படிஎன்றால் யாரும் யாருக்கும் பண அன்பளிப்பு கொடுக்கலாமா அதுவும் பெரிய தொகையை அரசாங்கம் கேள்வி கேட்டு கொடையமாடீர்களே கொள்ளையர்களுக்கு ரொம்ப சுலபமாச்சே பி.என் . அரசாங்கம் நீங்களே தவருபுரிபவனுக்கு சுலோபமாக வழி காட்டிவிட்டீர்களே ரொம்ப சந்தோசங்க ..