தாய்மொழிப் பள்ளிகளை மூடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை

mahadzirஅரசாங்கம்  தேசியப்  பள்ளிகளுக்கு  வழிவிடும்   நோக்கில்  தாய்மொழிப்  பள்ளிகளை  மூட  திட்டமிடவில்லை எனக்  கல்வி  அமைச்சர்  மஹாட்சிர்  காலிட்  கூறினார்.

“கல்விச்  சட்டம்  பகுதி  28  தேசியப்  பள்ளிகளுடன்  தாய்மொழிப்  பள்ளிகளும்  கட்டப்பட  வேண்டும், பராமரிக்கப்பட  வேண்டும்  என்று  குறிப்பிடுகிறது.

“ஆனால், மாணவர்  எண்ணிக்கை  குறைவாக  இருந்து  ஈராண்டுகளுக்கு  அந்நிலையில்  மாற்றமில்லை  என்றால்  அமைச்சு  அப்பள்ளிகள்  செயல்படுவதை  நிறுத்தி  விடலாம்”, என்றாரவர்.

மக்களவையில்  மார்க்கஸ் மொஜிகோ(பிஎன் – புடாடான்)வின் கேள்விக்குப்  பதிலளித்தபோது  மஹாட்சிர்  இவ்வாறு  கூறினார்.