சிஐஎம்பி தலைவர் நசிர் அப்துல் ரசாக் அவரின் சகோதரர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து யுஎஸ் 7 மில்லியன் பெற்றுக்கொண்டதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
வால் ஸ்திரிட் ஜர்னலுக்கு வழங்கிய அறிக்கை ஒன்றில் அதை ஒப்புக்கொண்ட நசிர், பணம் ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கு அவர்களின் தலைவர் உத்தரவுப்படி பிரித்துக் கொடுக்கப்பட்டது என்றார்.
ஆனால், அது நிறுவனங்களிடமிருந்தும் தனிப்பட்டவர்களிடமிருந்தும் தாம் திரட்டிக் கொடுத்த தேர்தல் நிதியிலிருந்து வந்த பணம் என்றே அவர் நினைக்கிறார்.
“வேறு மூலங்களிலிருந்து பணம் வந்திருந்தால் அது பற்றி எனக்குத் தெரியாது.
“மொத்த பணமும் (அம்னோ) தலைவர் (நஜிப்) உத்தரவுப்படி பிரித்துக் கொடுக்கப்பட்டு மிச்சம் ஏதுமின்றி கணக்கும் மூடப்பட்டது”, என்று நசிர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

























