சரவாக் சட்டமன்றம் ஏப்ரல் 11-இல் கலைக்கப்படும்

satemசரவாக்  சட்டமன்றம்  ஏப்ரல்  11-இல்  கலைக்கப்படுமென  முதலமைச்சர்  அடினான்  சடேம்  அறிவித்தார்.

சட்டமன்றக்  கலைப்பை  அடுத்து  தேர்தல்  ஆணையம்  சட்டமன்றத்  தேர்தலுக்கான  வேட்பாளர்  நியமன  நாளையும்  வாக்களிப்பு  நாளையும்  அறிவிக்கும்.

33 ஆண்டுகள்  பதவியிலிருந்த  அப்துல்  தயிப்  மஹமட்  பணி  ஓய்வு  பெற்றதை  அடுத்து  முதலமைச்சரான  அடினான்  பிஎன்னுக்குத்  தலைமையேற்று  நடத்தும்  முதல்  தேர்தல்  இது.

மொத்தம்  82 இடங்களுக்குப்  போட்டியிடப்படும். கடந்த  தேர்தலில் 71  இடங்கள்தான். இப்போது  11  தொகுதிகள்  கூடியுள்ளன.