பெண்களுக்குக் கைப்பைகள் பிடிக்கும்: ரோஸ்மாவைத் தற்காத்துப் பேசுகிறார் துணை அமைச்சர்

bagsவசதி  இருந்தால்  கைப்பைகள்,  நகைகள்  வைத்திருப்பதில்  தவறில்லை  என்கிறார்  விவசாயம்,  விவசாயம்  சார்ந்த  தொழில்  துணை  அமைச்சர் தாஜுடின்  அப்துல்  ரஹ்மான்.

அந்த  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  துணைவியார்  ரோஸ்மாவைத்  தற்காத்துப்  பேசும்போது இவ்வாறு  கூறினார்.

“ஒன்றிரண்டு  பைகள்  வைத்துக்கொள்ளலாம்,  ஏன்  கூடாது? அவர்  ஒரு  பெண்மணி.  பெண்களுக்குக்  கைப்பைகள்  என்றால்  பிடிக்கும்.

“ஒரு  பெண்ணை  மனத்தைக்  கவர  கைப்பை  உதவும்  என்று  சொல்லக்  கேட்டிருக்கிறேன்”, என  நாடாளுமன்றத்தில்  செய்தியாளர்களிடம்  அவர்  கூறினார்.

ரோஸ்மா அளவுக்குமீறி  நகைகள்  அணிய  கண்டதில்லை  என்றும்  தாஜுடின்  கூறினார்.