போலீஸ்: மாணவனை யாரும் மிரட்டவில்லை; அவன் சொந்தமாகவே நாக்கை வெட்டிக் கொண்டான்

stuமார்ச்  24-இல்  தன்  நாக்கு  நுனியைத்  துண்டித்துக்  கொண்ட  இரண்டாம் ஆண்டு  மாணவன்  யாருடைய  மிரட்டலுக்கும்  அஞ்சி  அவ்வாறு  செய்யவில்லை என  சிலாங்கூர்  போலீஸ்  தலைவர்  அப்துல்  சமா  மாட்  கூறினார்.

அம்மாணவன்  கூர்மையான  ஒரு  பொருளை  வைத்து  விளையாடிக்  கொண்டிருந்தபோது தன்  நாக்கை  அவனே  வெட்டிக்கொண்டான்  என்பது  போலீஸ்  விசாரணையில்  தெரிய  வந்திருப்பதாக  அவர்  சொன்னார்.

“இச்சம்பவம்  வகுப்பறையில்தான்  நடந்திருக்கிறது. அங்கு  34  மாணவர்களும்  ஆசிரியை  ஒருவரும்  இருந்தனர்.அவன்  கூறிக்கொண்டதைப்போல்  முகமூடி  அணிந்த  ஐந்து   மாணவர்கள்  அவனை  கழிப்பறைக்கு  வலுக்கட்டாயமாக  அவனை  இழுத்துச்  செல்லவில்லை”, என்றாரவர்.

இதுவரை  நடந்துள்ள  விசாரணைகளில்  மாணவன்  சொல்லும்  கதைக்கு  வலுவான  ஆதாரம்  இல்லை  என  அப்துல்  சமா  கூறினார்.