ஜிஎஸ்டி-ஏதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டவர் தடுப்புக் காவலில்

antiஜிஎஸ்டி- எதிர்ப்புப்  பேரணியில்  கலந்துகொண்ட  முகம்மட்  ஸப்ரான்  முகம்மட்  ஸுக்டி  தேச  நிந்தனைச்  சட்டம்  பிரிவு 4(1)(C)இன்கீழ்  விசாரணைக்காக  தடுத்து  வைக்கப்பட்டிருக்கிறார்.

நேற்று  கோலாலும்பூரில்    பிற்பகல்  மணி  சுமார்  3.30-க்கு  பொருள்,  சேவை  வரியை  எதிர்த்து  நடைபெற்ற  பேரணியில் கலந்து  கொண்ட  ஸப்ரான்  போலீஸ்  கார்  ஒன்றில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  கேலிப்படத்தை  ஒட்டியதற்காகக்  கைது  செய்யப்பட்டார்.

“ஸப்ரானை  விசாரணைக்காக   நான்கு  நாள்களுக்குத் தடுத்து  வைக்க  போலீசார்  அனுமதி  கேட்டனர்.  ஆனால்,  மெஜிஸ்ட்ரேட்  நாளைவரை  இரண்டு  நாள்களுக்கு  மட்டுமே  அனுமதி  அளித்தார்”,  என  ஸப்ரானி  வழக்குரைஞர்  நிக்  ஸரித்  நிக்  முஸ்தபா   மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.