அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து அகற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் திட்டத்தை எதிர்க்கவில்லை.
ஆனால், அது அரசமைப்புக்கு ஏற்புடையதல்ல என்றாரவர்.
“மகாதிரின் விருப்பத்தை நான் எதிர்க்கவில்லை. ஆனால், அது நடவாது. ஏனென்றால், அரசமைப்பு அதற்கு இடம்தராது”, என்று ரசாலி உத்துசான் மலேசியா நேர்காணலில் கூறினார்.
நஜிப்புக்கு எதிராகக் குடிமக்கள் பிரகடனம் ஒன்றை உருவாக்கியுள்ள மகாதிர் அதற்கு மக்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். மக்களிடமிருந்து போதுமான கையொப்பங்களைப் பெற்றதும் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் அதை ஒப்படைப்பது அவரின் திட்டம்.
மகாதிரின் திட்டம் நிறைவேறாது என்பதை அவரிடமே தெரிவித்திருப்பதாகவும் ரசாலி சொன்னார்.
1MDB விவகாரத்தில் துங்கு ரசாலியின் நிலைபாடுதான் என்ன? மற்ற அம்னோ தலைவர்கள்போல் தலையாட்டி பொம்மைதானோ????
மிகப்பெரிய அரசியல் சாணக்கியன் இந்த மகாதிமிர், இவருக்கு யாரை எந்த நேரத்தில் எப்படி கவிழ்க்க வேண்டும் என்பது அத்துப்படி, இவருடைய காலத்தில் இவரது துணையமைச்சர்களை எப்படி கவிழ்த்து வெளியேற்றினார், அன்வாருக்கு எப்படி சிறை தண்டனை வாங்கிக் கொடுத்தார். இவரை சாதாரணமாக எடைபோடமுடியாது, படுபயங்கர குள்ள நரி.