முந்தைய பேரணிகளுடன் ஒப்பிடும்போது நேற்றைய ஜிஎஸ்டி(பொருள், சேவை வரி)- எதிர்ப்புப் பேரணியில் கூட்டம் குறைவு என்பது பாஸின் பலத்தைக் காண்பிப்பதாக அக்கட்சி கூறியது.
“கூட்டத்தினர் எண்ணிக்கை என்று பார்த்தால் அது (பேரணி) தோல்விதான். பாஸும் அதில் இணைந்திருந்தால் கூட்டம் இன்னும் பெரிதாக இருந்திருக்கும்”, என பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பக்கத்தான் ஹராபான் ஏற்பாட்டில் நேற்று கோலாலும்பூரில் நடைபெற்ற பேரணியில் ஈராயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டணியில் பாஸ் இடம்பெறவில்லை.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாசின் பலம் நன்றாக தெரிந்துவிடும்!!!!
ஐயா துவான் இப்ராஹிம்! நீங்கள் கூறுவது உண்மைதான். இந்த GST வரி மக்களை வெகுவாக பாதித்துள்ளது. அதை உணர்த்தவே பக்காத்தான் ஹரப்பான் இந்த பேரணியை நடத்தியது. கூட்டம் சிறியதாயினும், அவர்கள் எடுத்துக் கொண்ட குறிக்கோள் போற்றுதலுக்குரியது. தெரியாமல்தான் கேட்கிறேன், எதிர்க்கட்சி என்கிற வகையில் நீங்கள் என்னதான் கிழித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
போகிற போக்கைப் பார்த்தால் தமிழக அரசியல்வாதிகளையே நம்ம ஊர் அரசியல்வாதிகள் மிஞ்சிவிடுவார்கள் போலும்.