எதிர்வரும் சரவாக் சட்டமன்ற தேர்தலில் 13 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அமானா அறிவித்துள்ளது.
இதன் தொடர்பில் பக்கத்தான் ஹராபான் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துபேசி முடிவெடுத்து விட்டதாக அமானா துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப் தெரிவித்தார்.
“13 இடங்களிலும் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கி விட்டோம். வேட்பாளர்களும் அடையாளம் காணப்பட்டு விட்டனர். இனி தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விடுவோம்”, என்றவர் செய்தியாளர்களிடம் கூரினார்.
அமானா எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால், வேட்பாளர்கள் அனைவருமே சரவாக்கியர்கள் என்றாரவர்.

























சரவாக்கில் அமானா கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது. எதற்காக இவர்கள் அங்கே காலை ஊன்றுகிறார்கள்?
சரவாக்கில் ஜெயக்க முடியும் DAP உடன் சேர்த்தல் …..