பணம் பில்லியன் கணக்கில் அவருடைய கணக்கில் மாற்றிவிடப்பட்டதாக செய்திகள் வந்து கொண்டிருப்பதால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலகுவதே நல்லது என இளைஞர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
“நேர்மையையும் பொறுப்புடைமையையும் காட்டும் வகையில் நஜிப் பதவி விலக வேண்டும் என விரும்புகிறோம்”, என அவ்விளைஞர்கள் ஓர் அறிக்கையில் கூறினர்.
நஜிப்பைப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு அனைத்து எம்பிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இக்கோரிக்கையை முன்வைத்த இளைஞர் அமைப்புகளில் கோலாலும்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா சீன அசெம்ப்ளி மண்டப இளைஞர் அணியினர், மலாயாப் பல்கலைக்கழகத்தின் புதிய இளைஞர் சங்கம் (யுமெனி), காபோங்கான் மஹாசிஸ்வா யுகேஎம், மாணவர் ஐக்கிய முன்னணி யுகேஎம், ஜோகூர் யெல்லோ பிளேம், கெராக்கான் மகாசிஸ்வா மாஜு யுபிஎம், கூட்டரசு பிரதேச மற்றும் சிலாங்கூர் ஹொக்கியான் சங்க இளைஞர் பிரிவு, பெர்சத்துவான் கொம்முனிடி பிரிஹாதின் சிலாங்கூர், கோலாலும்பூர், மலேசிய இளைஞர், மாணவர் ஜனநாயக இயக்கம் (டெமா) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அடுத்த பொதுத்தேர்தல் வரை அல்தாந்துயா நஜிப் பதவி விலகக் கூடாது. நஜிப் பதவி விலகா விட்டால் அடுத்த பொதுத்தேர்தலில் அம்னோ ஆட்சியை இழந்துவிடும் என மகாதிமிர் கத்துகிறார். முகிதீன் போராட்டம் நடத்துகிறார். முக்ரிஸ் மேடை தோறும் முழங்குகிறார். ஆக, நஜிப் பதவியில் இருந்தால் மட்டுமே, அடுத்த பொதுத்தேர்தலில் மாற்று அரசாங்கம் உருவாக வாய்ப்புள்ளது.
ஐயா சிங்கம் அவர்களே– அவன் விலகாமல் இன்னும் கொள்ளை அடிக்க வேண்டுமா? சிந்தியுங்கள்.
இன்று மலேசியர்களின் ஒட்டுமொத்த கவனமும் ஒருவர் மேலேயே உள்ளன. ஆனால் அவரை சார்ந்த ஒட்டுமொத்த கிழுவினருமே நாட்டின் நிலைமைக்கு பொறுப்பு ஏற்கவேண்டும். ஆக ஒருவர் விலகினால் அக்கட்சியை சார்ந்த மற்றவர்கள் நேர்மையாளர்கள் என்று பொருள்படுமா? அப்படித்தான் திரிப்பார்கள். மக்களும் பழயவைகளை நினைவில் கொள்ளாமல் மீண்டும் அவர்களையே தேர்வு செய்வர் . அப்புறம் ‘பழைய குருடி கதவை திறடி’ என்ற கதைதான். இறுதியில் நடக்க போவதும் இதுதான். திறமையை நம்பாமல் தன்னில் நம்பிக்கையும் இன்றி.அரசியல் தலைவர்கள் மூலம் அரசாங்க உதவியை மட்டுமே எதிர்பார்த்து வாழும் சமூதாயம் தன்மான உணர்ச்சி பெற்று தனது திறமையை வளர்த்து பொதுவாக போட்டிபோட்டு (யாசக வாழ்வு இன்றி) வாழ முடிவெடுத்தால் எல்லோருக்கும் நல்லது. சிறிது காலம் சிறமத்தை சந்தித்து பின்னடைவு கண்டாலும் நாளடைவில் பட்டை தீட்டிய வைரம் போல மிளிரலாம். இறைவன் எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தான் படைத்துள்ளார். உலகில் ஓர் இனம்தான் ஒன்றை செய்ய வேண்டும் என்ற நியதியில்லை . எந்த இனமும் இப்படித்தான் இருக்கவேண்டுமென்பதும் இல்லை. விதையை மண்ணுள் விதைத்து அது வளராவண்ணம் அதன்மேல் ஒரு பெரும் கல்லை வைத்தால், அவ்விதை முளைத்து வளருமா? நான் எந்த இனத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. எல்லோருக்கும் பொதுவானது. வாசிப்பவர்கள் தத்தம் அறிவு தெளிவிர்க்கேற்ப பொருள் கொள்வது வாசிப்பர்களின் உரிமை. நம் எல்லோரையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
en thaai thamizh அவர்களே! உங்கள் கருத்தை நான் மறுக்கவில்லை. ஆனாலும், நஜிப் பதவி இறக்கப்பட்டு, புதியதாக ஒரு பிரதமர் வேட்பாளர் அறிமுகப்படுத்தப் படுவாரேயானால், ‘இந்த புதியவருக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’ என தண்டோரா போட்டு, மீண்டும் அம்னோ ஆட்சி கட்டிலில் உட்கார்ந்திட வாய்ப்பு உண்டு. அதை விடுத்து, அடுத்த தேர்தல் வரை தொடர்ந்து நஜிப்பே பிரதமராக இருப்பாரானால், அவரே அம்னோவை வீட்டுக்கு அனுப்பும் ஒரு கருவியாக பயன்படுவார். [இது என்னுடைய சொந்த கருத்து. சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம்]
முள்ளை முள்ளால் எடுக்கும் வரை நஜிப் தேவை….இல்லைனா பழைய முள் காக்கா நம்மை மீண்டும் பதம் பார்த்து விடுவான்.இன்று அரசியல் சீர்த்திருத்தத்தை கத்தி கூப்பாடு போடுபவன் சுய லாபத்திற்கு அன்று நாட்டை நாசப்படுத்தியவன்! இன வெறி பாதிக்காப்பு வளையத்தை உருவாக்கி அதில் ராஜ போக வாழ்க்கையை அனுபவிப்பதும் இல்லாமல் நம் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்தான்! நமக்கு செய்த துரோகத்தை நாம் மன்னிக்கலாம்….ஆண்டவன் மன்னிக்க மாட்டான்,நேரம் வரும் பொது நிறைய உண்மைகள் வெளிவரும்!
ஐயா singam அவர்களே இவனை வீட்டுக்கு (?) அனுப்பினால் வரும் ஜென்மத்துக்கு கொஞ்சம் பயம் இருக்கும். அத்துடன் இவனை வீட்டுக்கு மட்டும் அனுப்ப கூடாது– நான் சொல்வது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் — நாம் உண்மையிலேயே கடந்த கால தலைகளை ஆராய்ந்தால் 99% உள்ளுக்கு இருக்க வேண்டும். நடக்குமா இங்கு?