அடுத்த பொதுத் தேர்தல் முறைப்படி நடத்தப்படுமானால் பிரதமர் அப்துல் ரசாக் தலைமையிலான ஆளும் கட்சி தோற்றுப்போகலாம் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
“தேர்தல் நியாயமாக, வாக்குப் பெட்டிகளில் தில்லுமுல்லு போன்றவை இல்லாமல் நடத்தப்பட்டால் பிஎன் தோற்கும் என்றே நினைக்கிறேன்”, என மகாதிர் கூறியதாக சிங்கப்பூரின் த நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
அதை எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற? உன் காலத்திலே இருந்து இதுதான் நடந்ததா? ம்ம்ம்….
தேர்தல் என்றுமே நன்றாக நடக்கவில்லை— அதிலும் 1969-பிறகு எல்லாமே தலை கீழ். பயமுறுத்தல் தலை விரித்து ஆடியது-ஆடிக்கொண்டிருகிறது– வங்காளதேசத்து ஆசாமிகளும் மின்சார தடைகளும்.
இந்த தில்லுமுள்ளு உன் காலத்திலயே அரங்கேற்றம் கண்டதுதானே காகாதிரே ? இப்பொழுது ஒப்பாரி எதற்கு ? .நாட்டின் நிர்வாகம் தில்லுமுள்ளு அடங்கியதற்கு உன்னுடைய பங்களிப்பு அளப்பரியது.இனத்துவேசம் உன்னுடைய முகத்திரை. என்னதான் உத்தமனாக வேஷம் போட்டாலும் அன்று தமிழர்களுக்கு இழைத்த அட்டுளியத்தை எளிதில் மறக்க முடியாத கறைபடிந்த சரித்திரம். தற்பொழுது நாட்டின் நிலமை உன்னுடைய ஆட்சியின் தொடர்கதை.