ஆஸ்திரேலிய நாடாளுமன்ற விசாரணைக் குழு அந்நாட்டு வங்கி அதிகாரி ஒருவரிடம் அவருடைய வங்கிக்கு 1எம்டிபி ஊழலுடன் தொடர்புண்டா எனத் துருவித் துருவி விசாரித்துள்ளது..
யுஎஸ்$1பில்லியனுக்குமேல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் AmBank வங்கிக்கணக்குக்கு மாற்றிவிடப்பட்டது பற்றி அறிவாரா என்று ANZ Bank துணைத் தலைவர் கிரேஹேம் ஹோட்ஜசிடம் வினவப்பட்டது.
ANZ வங்கி AmBank-இல் 24 விழுக்காடு பங்குரிமை வைத்துள்ளது.
ஹோட்ஜஸே AmBank இயக்குனர் வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்படவுள்ளார்.
ANZ வங்கி சிறுபான்மை பங்குகளை வைத்திருப்பதால் அதன் அதிகாரம் வரம்புக்கு உள்பட்டதுதான், ஊழல் விவகாரத்தில் அதனால் எதுவும் செய்ய இயலாது என அவர் கூறியதாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளேடு தெரிவித்துள்ளது.
“அங்கு நடப்பது பற்றிப் பேசுவதற்கு வாரிய இயக்குனர்களுக்கு அனுமதி இல்லை”, என்றாரவர்.
இதனிடையே, 1எம்டிபி ஊழல் தொடர்பில் ANZ-உம் ஆஸ்திரேலியாவின் இன்னொரு வங்கியான NAB-உம் சிங்கப்பூர் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.