இரகசிய காப்புச் சட்டத்தின்(ஒஎஸ்ஏ)கீழ் பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி கைது செய்யப்பட்டதைப் “பிற்போக்கான செயல்” என முன்னாள் செனட்டர் முகம்மட் இசாம் முகம்மட் நோர் வருணித்திருக்கிறார்.
“ரபிஸியையோ வேறு எவரையுமோ ஓஎஸ்ஏ-இன்கீழ்க் கைது செய்வது தவறு. அது பிற்போக்கான செயலாகும்”, என இசாம் முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.
“தேசிய பாதுகாப்புக்கு மிரட்டல் என்றால் மட்டுமே ஓஎஸ்ஏ-யைப் பயன்படுத்திக் கைது செய்ய வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.