பணி ஓய்வு நிதி நிறுவனம் (KWAP) எஸ்ஆர்சி இண்டர்நேசனலுக்குக் கொடுத்த ரிம4பில்லியன் கடன் குறித்த விவரங்களை 1எம்டிபி-யால் இப்போதைக்கு வெளியிட இயலாது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
“1எம்டிபி-இன் வழக்கமான நடைமுறை என்னவென்றால் , முதலில் சொல்லப்படும் தகவல் உண்மையானதா, சரியானதா என்பதை ஆராய்ந்து அதன்பின்னரே விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும்”, என நாடாளுமன்றத்தில் முகம்மட் அரிப் சப்ரி (டிஏபி- ராவுப்) கேட்டிருந்த கேள்விக்கு எழுத்துவழி தெரிவித்த பதிலில் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
ரிம4 பில்லியன் கடனில் மீதித் தொகை என்னவாயிற்று அது KWAP-இடம் திருப்பிக் கொடுக்கப்பட்டதா என முகம்மட் அரிப் கேட்டிருந்தார்.
முகம்மட் அரிப் KWAP-இன் ரிம4 பில்லியன் பற்றி கேள்வி எழுப்புவது இது இரண்டாவது முறையாகும்.
மங்கோலியாவில் நிலக்கரி திட்டமொன்றுக்காக 1எம்டிபி-இன் துணை நிறுவனமான எஸ்ஆர்சிக்கு KWAP அக்கடனை வழங்கியிருந்தது.
முன்பு கேட்டிருந்த கேள்விக்கு ரிம4பில்லியன் கடனில் ரிம10மில்லியன் மங்கோலிய நிலக்கரித் திட்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாக நஜிப் கூறியிருந்தை முகம்மட் அரிப் நினைவுபடுத்தினார்.
“அப்படியானால் ரிம4 பில்லியனில் பாக்கித் தொகை என்னவாயிற்று அதில் எவ்வளவு KWAP-இடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது எனக் கேட்டிருந்தேன்”, என்றவர் சொன்னார்.
உன்னை மக்கள் மக்கள் துரத்தி அடிப்பதை உதைப்பதை இப்பொழுதே கணித்து சொல்கிறேன் நடக்கும்தா அது
புதிய தஸ்தாவேதுக்களெல்லாம் தயாராகும் வரை நாங்கள் காத்திருப்போம்!
வேறுவழி… ?
ம்ம், அதேதான் அடிச்சுக் கேட்டாலும் சொல்லக்கூடாது, மாட்டிக்கிடுவோம்ல…