செவ்வாய்க்கிழமை பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி கைது செய்யப்பட்டது நாடாளுமன்ற விதிகளை மீறும் ஒரு செயல் என்று எதிரணி எம்பி ஒருவர் கூறினார்.
அந்த வகையில் சட்டப்படியாகவே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒஸ்மான் கூறியிருப்பது தவறு என்கிறார் பாடாங் செராய் எம்பி என். சுரேந்திரன்.
“அவர் சொல்வது முற்றிலும் தவறு. ரபிஸி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது. அது 1952 நாடாளுமன்ற( சலுகை, அதிகாரம்)ச் சட்டத்தை மீறிய செயலாகும்.
“அச்சட்டத்தின் பிரிவு 9(இ) ஒரு எம்பி-யை நாடாளுமன்றத்துக்கு வரும்போதோ மன்றத்திலிருந்து போகும்போதோ தடுப்பது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்கிறது.
“ரபிஸி நாடாளுமன்றத்திலிருந்து ‘போகும்போது’ கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்த படங்களும் சாட்சிகளும் உண்டு.. எனவே, பிரிவு 9(இ) மீறப்பட்டிருப்பதை மறுக்கவியலாது”, என சுரேந்திரன் ஓர் அறிக்கையில் கூறினார்.
வணக்கம். மக்கள் பிரச்னை தவிர்த்து கட்சி பிரச்னை பற்றி மட்டுமே இந்த சுரேந்திரன் அதிகம் பேசுகிறார் இந்தியர்கள் பிரச்சனை குறித்து ஏதாவது உருப்படியான முயற்சி இவர் செய்தது உண்டா. அங்கே கோஷம் இங்கே கோஷம் என்று மட்டும் நிறைய செய்கிறார்.
என்ன சார் டெங்கில் இப்படி சொல்லிட்டிங்க. மலேசிய இந்தியர்களில் 3இலட்சம் பேருக்கு அடையாள ஆவணங்கள் இல்லை என்று போட்ட குண்டுல ம.இ.கா மண்ட குண்டன் எல்லாம் , குண்டு கலங்கி எங்கே அந்த 3 லட்சமுனு தேடோ தேடுனானுங்கல மறந்திட்டிங்கலா?
ஹலோ நம் தமிழர் டேங்கில் சுரேந்திரன் அதிகம் பேசுகிறார் என்று சொல்லும் உங்களுக்கு அருகதை கிடையாது