1எம்டிபியின் கோளாறுகளுக்கு அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஷாரோல் அஸ்ரால் ஹல்மியும் நிர்வாகத்தில் இருந்த மற்றவர்களும்தான் பொறுப்பு என்பது பொதுக் கணக்குக் குழுவின் முடிவாகும்.
“அந்த வகையில் சட்ட அமலாக்கத் தரப்பு ஷாரோல்மீதும் மற்ற நிர்வாகிகள்மீதும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்”, என பிஏசி அறிக்கை கூறிற்று.
நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட 1எம்டிபி மீதான பிஏசி அறிக்கை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று தாக்கல் செய்யப்பட்டது.
“ஒரு நிறுவனம் என்ற முறையில் 1எம்டிபி சிறந்த நடைமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், 1எம்டிபி நிர்வாகத்திலும் இயக்குனர் வாரியத்திலும் சில குறைபாடுகளைக் காண முடிகிறது”, என அது கூறியது.
சில நேரங்களில் வாரியத்தின் முடிவுகளையும் ஆலோசனைகளையும் மீறி நிர்வாகம் நடந்து கொண்டதையும் வாரியத்தின் முடிவுக்குக் காத்திராமல் செயலில் இறங்கியதையும் அது சுட்டிக்காட்டியது.
“முழுமையாக மதிப்பீடு செய்யப்படுவதற்கு முன்பே முதலீடுகள் செய்திருக்கிறார்கள், கடன்கள் வழங்கி இருக்கிறார்கள்”, என்றும் அந்த அறிக்கை கூறியது.
நிறுவனத்தை நிறுவி அதன் ஆலோசனை வாரியத்துக்கும் தலைமையேற்றிருக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பொதுக் கணக்குக்குழு பரிந்துரைக்கவில்லை.
ஆகா! ஆகா! மிகச்சரி! எவ்வளவு நாளைக்குத்தான் நஜிபையே குறைக் கூறிக் கொண்டிருப்பது? மற்றவர்களையும் கொஞ்சம் நாறடிக்கலாமே!
எதைடா நீங்க ஒழுங்காக செய்தீங்க? எல்லாம் தரமில்லா தகுதி இல்லா சப்பிகளை பொறுப்பில் வைத்தால் இதுதான் நடக்கும். காகாதிமிருக்கே இது பல ஆண்டுகளுக்கு பின் தானே உணர்ந்தான். மீசையில் மண் ஓட்டலையே என்பதுதானே உங்களைப்போன்ற ஈன ஜென்மங்களின் சால்ஜாப்பு? மக்களின் பணம் மக்களுக்கு பயன்படாமல் கொள்ளை அடிக்கப்படுகிறது– தெரிந்தும் பெரும்பாலான மலாய்க்காரன் களுக்கு அக்கறை கிடையாது–இதுவும் காகாதிமிரின் செயல் முறைதான். இப்போது அதிகாரத்தில் உள்ள ஜென்மங்கள் இன்னும் என்ன என்ன செய்ய போகின்றான்களோ.?
தலைவர் மட்டும் அல்ல. 1MDB மூலையாக இருந்த அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். அதில் பொம்மலாட்டக்காரனாக இருந்தவருக்கும் இதே கதி வர வேண்டும்.
நம் நாட்டின் சட்ட திட்டங்கள் செத்து குழி தோண்டி புதைகப்பட்டு வெகு நாட்களாகிவிட்டது ஆளும் வர்கதினருக்கே எல்லாம் சாதகமாய் இருக்கிறது இந்த நாட்டில் வாழும் மக்கள் இதெல்லாம் அனுபவித்தாகவேனும்……நம் நாட்டையும் மக்களையும் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் திரு.மகாதிர் அவர்களே இப்ப உங்களுக்கு தலைகால் தெரியாது சந்தோஷமாய் இன்பமாய் மகிழ்ச்சியாய் இருப்பீர்களே! இருக்கணும் வினை விதைப்பவன் வினை அறுப்பான் இது உலக நியதி இந்த நாட்டு தமிழர்களுக்கு நீங்கள் செய்த பச்சை துரோகம் ஈரேழு ஜென்மம் உங்கள் பரம்பரையே சும்மா விடாது இது சத்தியம்.
பொறுப்பேற்று என்ன நடக்கப்போவது? ஒன்றும் இல்லை. கொள்ளை அடித்தது அடித்ததுதான்– சீனா போல் நிற்கவைத்து சுட வேண்டும்– எல்லாம் பறிமுதல் செய்யப்பட வேண்டும்? நடக்குமா இங்கு? குறைந்தது கம்பி எண்ண வைக்க வேண்டும்– இதெல்லாம் நடக்காது– ஆனால் இந்த கொல்லைகாரன்களும் அவன்களின் சந்ததியினரும் கவலை இல்லாமல் ஆட்டம் போடலாம். இதுதான் இன்றைய நிலை.