பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லியை நாடாளுமன்றத்துக்கு வெளியில் ஒஎஸ்ஏ-இன்கீழ் வாரண்டி இன்றியே கைது செய்யும் அதிகாரம் போலீசுக்கு உண்டு என்பதை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா ஒப்புக்கொண்டார்.
ஆனாலும், போலீசார் கைது குறித்து முன்கூட்டியே தமக்குத் தெரிவித்திருக்கலாம், அப்படிச் செய்திருந்தால் அதைத் தாம் மக்களவைக்குத் தெரியப்படுத்துவதற்கு வசதியாக இருந்திருக்கும் என்றார்.
“மேலும், நாடாளுமன்றத்துக்கு அருகில் கைது நடவடிக்கை நடந்துள்ளது.
“நாடாளுமன்றக் கூட்டம் பாதுகாப்புடனும் நல்லிணக்கத்துடனும் நடப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு போலீசுக்கும் உண்டு”, என்றாரவர்.
“சிவில் வழக்குகளில் நீதிமன்ற அவமதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கைது செய்யப்படுவதினின்றும் பாதுகாப்பு உண்டு ஆனால் கிறிமினல் வழக்குகளில் அந்தப் பாதுகாப்பு இல்லை”, என்றும் பண்டிகார் கூறினார்.
ஐயோ தலையே வலிக்குது என்னக்கு,மக்களவை தலைவர் என்ன சொல்ல வராரு சொல்லறது புரியும் படி சொன்னால் நல்லது.
இது ஒரு சட்டம் படிக்காத அவை தலைவர் , ஒரு சமுகம் ஒட்டு போட்டதற்கு நன்றி சொல்ல,அவர்களை மகிழவைக்க தேர்வு செய்யப்பட்ட தலைவர் என்பதால் , அவர் பல்லை கடித்து கொண்டு பேசுவது அம்னோ ஆட்சி உறுப்பினர்களுக்கு தவிர மற்ற யாருக்கும் புரியாது.
என்ன பண்டிகாரே? அன்றைக்கு ஒரு அமைச்சர் உங்களை மீறுகிறார்! இன்றைக்கு போலிஸ் உங்களை மீறுகிறது! போகிற போக்கைப் பார்த்தால் யாருக்கும் உங்களைத் தெரியாமல் போய்விடும் போலிருக்கு!
அவமானத்தின் சின்னம்.அண்டை நாட்டின் நாடாளுமன்ற செயல்முறையை பின்பற்ற வழியை காணுங்கள்.
சிந்திக்கும் எவரினுடைய பேச்சையும் இந்த ஈன ஜென்மங்கள் கேட்கப்போவதில்லை– அதைப்பற்றி அக்கறையும் கிடையாது–காரணம் யார் என்ன செய்ய முடியும்? 58 ஆண்டுகள் உட்கார்ந்து சுகம் கண்ட ஜென்மங்கள்– எப்படியும் ஆட்சியிலேயே இருக்கபோகும் திமிர்– நாடும் மக்களும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது- தானும் தன்னுடைய குஞ்சுகளும் சப்பிகளும் இனமும் தான் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணமும் கேடு கெட்ட புத்தியும் இருக்கும் போது எப்படி இங்கு எல்லா இனங்களும் ஒற்றுமையுடன் இருக்க முடியும்– ?