பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் திரைமறைவில் 1எம்டிபிமீது ஆதிக்கம் செலுத்தினாரா என்பதை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் எனச் சிந்தனைக்குழு ஒன்று கேட்டுக்கொண்டிருக்கிறது,
“ஆலோசனை வாரியத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர் ஆதிக்கம் செலுத்தினாரா என்பதை ஆராய வேண்டும்.
“தவறினால் நடந்துள்ள விசாரணை முழுமையானது ஆகாது”, என ஜனநாயகம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் கழக (ஐடியஸ்) செயல்முறை அதிகாரி சைபுல் வான் ஜான் கூறினார்.
ஒரு பிரதமரை அரசு-சார்ந்த நிறுவனம்(ஜிஎல்சி) ஒன்றின் ஆலோசனை வாரியத் தலைவராக நியமித்ததையும் அவர் குறை கூறினார். அது “மடத்தனமான வேலை” என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
1எம்டிபி மீதான பொதுக் கணக்குக் குழு அறிக்கை குறித்துக் கருத்துரைத்தபோது வான் சைபுல் அவ்வாறு கூறினார்.
நாட்டில் செல்வாக்குமிக்க மனிதரின் சொல்லை ஜிஎல்சி வாரியத்தில் உள்ளவர்களாலும் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும் மீற முடியுமா.
“பேரரசரே அவருடைய ஆலோசனைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்க்கிறார். இயக்குனர்கள் யாரும் அவரின் ஆலோசனைக்கு மறுப்பு கூற இயலுமா?.
“முன்னாள் (1எம்டிபி) சிஇஓ ஆலோசனை வாரிய இயக்குனர்களைப் புறக்கணித்தே வந்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இதுதான் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு சக்திவாய்ந்த ஒருவரிடமிருந்து உத்தரவு வந்து கொண்டிருந்ததாம்”, என்றாரவர்.
இது என்னடா கேள்வி? இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று கூடவா தெரியவில்லை? செய்வதெல்லாம் செய்து விட்டு நல்ல பிள்ளை வேஷம் போடும் நாயகர்கள்– அல்தான் தூயா ? four corner ஆஸ்திரேலியா தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு புரியும். இவ்வளவு அநியாயம் பண்ணுபவர்களுக்கு எப்படி நல்ல தூக்கம் என்று எனக்கு புரிய வில்லை. இரத்தத்தில் ஊறி இருக்கும்.
ஆடு வித்தரா, ஆட்டு வித்தரா என்பது பொது மக்களுக்குத் தெரியும்! சிந்தனைக்குழுக்கும் தெரியும்! கண்டறிந்து என்ன செய்யப் போறிங்க? அதுக்குள்ளே ஆவணங்களை மாற்றிவிடுவார்களே!