பொதுமக்கள் முன்னிலையில் வாதமிட பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தயாராக இருப்பதை பிஎன் வியூகத் தொடர்பு இயக்குனர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் வரவேற்றார்.
அது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட அப்துல் ரஹ்மான், “தாமான் மங்கிஸ் (நிலம்) மீது பொது விவாதம் நடப்பதை நான் வரவேற்கிறேன். என் அதிகாரி உங்கள் தரப்பைத் தொடர்ந்து விவாதம் பற்றிய விவரங்களை முடிவு செய்வார்கள்”, என்றார்.
“பினாங்கு மக்கள் தாமான் மங்கிஸ் ஊழலின் பின்னேயுள்ள உண்மைகளைத் தெரிந்துகொள்ள விவாதம் உதவும்”, என்றும் அவர் கூறினார்.
லிம், அந்த நில விவகாரம் பற்றி நகர்ப்புற நல்வாழ்வு வீடமைப்பு, ஊராட்சி அமைச்சருடன் விவாதமிட தயார் என்று. நேற்று அறிவித்தார். வாதம் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
“நிறைய தகவல் இருப்பதாக சொல்கிறார். என்னிடம் அவ்வளவு இல்லை. இருந்தாலும் அவருடன் (அப்துல் ரஹ்மான்) விவாதம் செய்ய நான் தயார்”, என்றாரவர்.
இதுலிருந்து என்ன புரிகிறது அங்கு ஊழல் இல்லை.
உழல் செய்தவன் சொல்லாம கொல்லம ஓடிடான்
வரும்! ஆனா வராது!
முன்பு அன்வருடன் வாதம் செய்து விழி பிதுங்கி போன அம்னோ மந்திரி நிலைதான் இந்த மந்திரிக்கும் ஏற்படும் எனது திண்ணம் . வாய் சவடால் வீரர்கள்தான் இந்த BN கூட்டம் .
பார்த்திபன் & வடிவேலு நகைச்சுவை பார்த்து ரொம்ப நாளாச்சு
இந்த இரண்டு பேசினால் அப்படித்தானே இருக்கும்
வாய்மையே வெல்லும்