நஜிப்பை அகற்ற வெளிநாட்டு உதவியை நாடுகிறாரா மகாதிர்?

foreignஎன்ன  வேடிக்கை  பாருங்கள், பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைப்  பதவியிலிருந்து   வெளியேற்ற   உலக  நாடுகளின்  உதவியை  நாடுகிறாராம்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.  தி  ஆஸ்திரேலியன்  டுடே  கூறுகிறது.

தமது  நீண்டகால  ஆட்சியில்  வெளிநாட்டுத்  தலையீடுகளைக்  கடுமையாகக்   கண்டித்து  வந்தவர்  டாக்டர்  மகாதிர்.  தீவிர  தேசியவாதியான  அந்த  முன்னாள்  பிரத்மர்தான்  இப்போது ‘திடீர்  பல்டி’  அடித்துள்ளார்  என்று  அது  குறிப்பிட்டது.

“வழக்கமாக  மலேசிய  விவகாரங்களில்  வெளியார்  தலையிடுவதை   நான்  விரும்புவதில்லை.  ஆனால்,  சீராக்கம்  செய்யும்  வழிமுறைகள் எல்லாம்  முற்றாக  அடைபட்டுக்  கிடக்கின்றன”,  என  மகாதிர்  அந்த  நாளேட்டின்  வார இறுதிப்  பதிப்பான  தி  வீக்என்ட்  ஆஸ்திரேலியனிடம்  தெரிவித்ததாக  கூறப்பட்டுள்ளது.

மலேசியாவை  உலுக்கும்  ஊழல்களை  ஆஸ்திரேலியா  கண்டும்  காணாததுபோல்  இருப்பதாக  அவர்  குறைபட்டுக்  கொண்டாராம்.

“ஆஸ்திரேலிய  அரசாங்கம்  மலேசிய  பிரதமருக்குத்  தொல்லை கொடுக்க  வேண்டாம்  என  நினைப்பதுபோல்  தெரிகிறது”, என்று  மகாதிர்  கூறியிருக்கிறார்.