மலேசியாவின் ஷியாரியா விமான நிறுவனம் ரயானி ஏர், விமானிகள் வேலைநிறுத்தம் காரணமாக அதன் பயணச் சேவையை அடுத்த அறிவிப்புவரை இரத்துச் செய்துள்ளது.
“இடைஞ்சல்களுக்கு வருந்துகிறோம்”, என அந்த விமான நிறிவனத்தின் முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மூன்று மாதங்களுக்குமுன் தொடங்கப்பட்டது ரயானி ஏர் சென். பெர்ஹாட்.
வெள்ளிக்கிழமையிலிருந்து அதன் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் நிறுவனர் ரவி அழகேந்திரனுடன் தொடர்புகொள்ள பெர்னாமா செய்தி நிறுவனம் முயன்றது. முடியவில்லை.
மேல்விவரம் அறிய விரும்பும் அதன் வாடிக்கையாளர்கள் அதன் அழைப்பு மையத்தைத் தொடர்புகொள்ளலாம் என ரயானி ஏர் முகநூல் பக்கத்தில் கூறியிருந்தது.
– Bernama
இது ரவி அழகேந்திரன் – கார்த்தியாயினி கோவிந்தன் உரிமையாளர்கள் என்று அறியும் போது நமக்கும் பெருமை தான். ஆனால் எல்லாருமே ஏர் ஏசியா டோனி ஆகிவிட முடியாது! ஆனாலும் எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு உங்கள் விமானச் சேவை வெற்றிகரமாக உலா வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்!
“விடா முயற்சி வெற்றிதரும்”, நிறுவனர் ரவி அழகேந்திரன் வெற்றி பெற நல்வாழ்த்துகள்
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் வாழ்த்துக்கள் .
துணிந்து விமான சேவை ஆரம்பித்த பொழுதே இவர் தோணி வேர்ணன்தாஸ் ஆகிவிட்டார். இது தற்காலிக தடைகளே. முடியும். ராயாணி ஆர் பேர் போடும் . வாழ்த்துகள்.
மீண்டும் அடி எடுத்துப் பாருங்கள். நிச்சயம் வெற்றி பெறலாம். நீங்கள வெற்றி பெற்றால் நம் இந்திய சமுதாயதிற்கே பெருமை அல்லவா?
மேன் மேலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்