ஜாகிருக்குத் தங்கும் வசதிக்கும் உணவுக்கும் மட்டுமே திரெங்கானு ஏற்பாடு செய்துள்ளது

jagirதிரெங்கானு  அரசு.  முஸ்லிம்  பிரச்சாரகரான  டாக்டர்  ஜாகிர்  நாயக்  அம்மாநிலத்தில்  தங்கி  இருக்கையில்  அவருக்குத்  தங்கும்  வசதி,  உணவு  ஆகியவற்றை  மட்டுமே  ஏற்பாடு  செய்து  கொடுக்கிறது  மற்ற  செலவுகளை  இஸ்லாமிய  ஆராய்ச்சி  அறநிறுவனத்தின்  மூலமாக அவரே  கவனித்துக்  கொள்கிறார்  என  மந்திரி  புசார்  அஹமட்  ரஸிப்  அப்துல்  ரஹ்மான்  கூறினார்.

சில  தரப்பினர்  ஜாகிரை  அழைத்து  வர  திரெங்கானு  மாநிலம்  பெரும்  பணம்  செலவிட்டிருப்பதாகக்  கூறிக்  கொண்டிருப்பதற்கு  எதிர்வினையாக  மந்திரி  புசார்  இவ்வாறு  கூறினார்.