மகாதிர்: அன்வாருக்கு வயதாகிவிட்டது, பிரதமராக முடியாது

an-mahசிறையிலிருக்கும்  முன்னாள்  எதிரணித்  தலைவர் அன்வார்  இப்ராகிமுக்கு  வயதாகி  விட்டது  என்பதால்  அவரால்  பிரதமராக  முடியாது  என்கிறார்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

“அவருக்கு  வயதாகி  விட்டது  என்று  நினைக்கிறேன்”  என  தி  ஆஸ்திரேலியன்  பத்திரிகைக்கு  வழங்கிய  நேர்காணலில்  மகாதிர்  கூறினார்.  ஆனால், உண்மையில்  அன்வாருக்கு  வயது  68தான்.

“70ஆம்  வயதில்  80  வயதாகும்போது  நான்  பிரதமராக  இருக்க  முடியாது  அதாவது  விலகிக்  கொள்வேன்  என்பதை  முன்கூட்டியே  அறிவித்தேன். 80  ஆவதற்கு  முன்பே விலகிக்  கொண்டேன்”, என்று  91-வயதாகும்  மகாதிர்  கூறினார்.

ஆனால்,  “மக்கள்  ஆதரவு  இருந்தால்  அதைப்  பற்றி  நான்  சொல்வதற்கு  ஏதுமில்லை”, என்றவர்  குறிப்பிட்டார்.