இஸ்லாமியச் சமயச் சொற்பொழிவாளர் டாக்டர் ஸாகிர் நாய்க் எதிர்வரும் சனிக்கிழமை புக்கிட் ஜாலில், தேசிய ஹோக்கி அரங்கத்தில் உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் மலேசியாகினியிடம் கூறினார்.
இதற்கு அடுத்து மலாக்காவில் நடபெறவிருந்த இது போன்ற நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டாக்டர் ஸாகிர் நாய்க்கின் உரைகளுக்கு ஏற்பாடு செய்துள்ள ஷாகுல் ஹமிட் டாவுட் புக்கிட் ஜாலில் நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனுமதிக்கு மனுச் செய்துள்ளதாக இதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இவ்விரண்டு நிகழ்ச்சிகளின் கூட்டு ஏற்பாட்டாளர்களான 10 அரசு சார்பற்ற அமைப்புகள் ஒரு ஹோட்டலில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர், ஷாகுல் தாங்கள் போலீசாரிடம் இன்று பேசியதாகவும், அவர்கள் சில விளக்கங்கள் கேட்டதாகவும் கூறினார்.
மேலும், மலாக்காவில் நாய்க்கின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அவர் கூறினார்.
தங்கும் விடுதியிலோ அல்லது பொது மண்டபத்திலோ ஜாகிர் பேசுவது பிரச்சனை இல்லை ஒரு சமூகத்தையோ சமயத்தையோ இழிவாக பேச அனுமதிக்க முடியாது இதற்க்கு காவல் துறை கண்காணிப்பு அவசியம் வேண்டும்.
இந்நாட்டில் இனவாதத்தைக் கொண்டு ஒற்றுமையை குலைத்தாகி விட்டது. இனி மதவாதத்தைக் கொண்டு மிஞ்சி இருக்கும் ஒற்றுமையையும் குளிக்கப் பாடுபடும் அயல் சக்திகளுக்கு உள்ளூர் வாசிகள் உடைந்தையாக இருப்பதும் அதற்கு அரசாங்கம் முதலில் அனுமதி அளித்து பின்னர் எதிர்ப்பு வந்ததும் பின் வாங்குவதும் மடமை.
அவர்களுக்குள் பேசிக் கொள்ளட்டும்,அது பிரச்னை இல்லை ஆனால் தமிழர்கள் நமக்கெதற்கு vvip நாற்காலி.