சர்ச்சைக்குரிய இஸ்லாமிய ஆன்மிகப் பேச்சாளர் ஜாகீர் நாயக்கின் மகன் பினாங்கில் சொற்பொழிவாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பினாங்கு துணை முதலமைச்சர் I முகம்மட் ரஷிட் ஹஸ்னோன் இதைத் தெரிவித்தார்.
ஜாகீரின் மகன் பாரிக் நாயக், “இஸ்லாம் பற்றிய தப்பெண்ணங்கள்” என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை இரவு பென்யாயாங் சமூக மண்டபத்தில் உரையாற்றுவார்.
பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தலைமையில் நடந்த மாநில ஆட்சிமன்றக் கூட்டத்தில் அந்நிகழ்வுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டதாக ரஷிட் கூறினார். அக்கூட்டத்தில் தாமும் மாநிலத்தின் இரண்டாம் நிலை துணை முதல்வர் பி.இராமசாமியும் கலந்து கொண்டதாக அவர் சொன்னார்.
அந்நிகழ்வுக்கு இரண்டு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற சமயங்களைத் தொடக் கூடாது, சிறுமைப்படுத்தக்கூடாது, பேசப்போகும் பொருள் பற்றி மாநில போலீசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இது நிச்சயம் பதினாறு அடி பாயும்.
இல்லை! பினாங்கில் அது பாயாது! மற்ற சமயங்களை தொடக்கூடாது, சிறுமைப்படுத்தக் கூடாது என்கின்ற நிபந்தனைகள் உண்டு! ஆனால் மற்ற மாநிலங்களில் அது பாயும்.
இவன்கள் என்ன பேச முடியும்? அறிவோடு பேச முடியுமா? எல்லாவற்றிற்கும் அவன்களின் மத நூலைத்தான்ஆதாரமாக குறிப்பிடுவான்கள்– ஒரு காலத்தில் விவிலிய நூலுக்கும் அந்த பெருமை இறந்தது– ஆனால் இன்றைய அறிவியல் உலகில் அந்த நூலும் கேள்விக்கு ஆளானது– ஆனால் இவன்களின் நூலை யாரும் கேள்வி கேட்க கூடாது. இது என்னே அறிவிலித்தனம்? நம் திருக்குறளுக்கு ஏதும் ஈடு இணை கிடையாது– ஆனாலும் நாம் எவருடைய நம்பிக்கையையும் ஏளனம் செய்வது நல்லது அல்ல– ஆனால் இந்த ஈன ஜென்மங்கள் மற்ற சமயத்தினரை மட்டம் தட்டுவதே வேலையாக கொண்டிருக்கின்றனர்.
இவன் மத்திய கிழக்கு சென்று ISIS – ஈன ஜென்மங்களுக்கு அறிவுரை கூறலாமே? நாம் தீவிரவாதிகள் அல்லவே? இவன் ஏன் இங்கு வர வேண்டும்? இந்த பெரிய அறிவாளியை சிரியாவுக்கு அனுப்பிவையுங்கடா. இவனைப்போன்றவன் மட மதவாதிகளுக்கு பெரிய அறிவாளி- காரணம் அவன்கள் மட மதவாதிகள் ஆயிற்றே.
!
தந்தையைப் போல் “மதம்” பிடித்து அலையாமல், எல்லா மதத்தினரையும் மதித்து நடந்தால் நல்லது
மலேசியா இஸ்லாமிய நாடு என்று நாடாளுமன்றத்தில் காகாதிர் நிறைவேற்றியதன் விளைவு இன்றைய இனவாதத்தின் அட்டுழியம்.காகாதிர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ம இ கா மௌனமாக இருந்தது.சமுதாயத்திற்கு பின்னடைவு.சுயநலனுக்காக சமுதாயத்தை இந்த அளவுக்கு அடமானம் வைத்தது அவமானத்தின் சின்னம்.சமுதாயமே மீண்டும் கொட்ட கொட்ட தலையில் மிளகாய் அரைக்க வழி விட போகின்றிர்களா? முடிவு உங்கள் கையில்.