ஹுலு கிளாங்கில் மூவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்

raidஇன்று  அதிகாலை  ஹுலு  கிளாங்கில்  கைவிடப்பட்ட  ஒரு  கட்டிடத்தில்   பதுங்கியிருந்த  கொள்ளையர்கள்  என்று  சந்தேகிக்கப்படும்  அறுவர்மீது  அவர்கள்  எதிர்பாராத  நேரத்தில்  தாக்குதல்  நடத்திய  போலீசார்  அவர்களில்    மூவரைச்  சுட்டுக்  கொன்றனர்.

கொள்ளையர்கள்  ஹைலேண்ட்  டவர்ஸ்  கட்டிடத்தின்  முதல்  மாடியில் பதுங்கியிருப்பதாக  தகவல்   கிடைத்ததும்  காலை  மணி  ஐந்துக்கு  போலீசார்  தாக்குதல்  மேற்கொண்டதாக  சிலாங்கூர்  சிஐடி  தலைவர்  அட்னான்  அப்துல்லா  கூறினார்.

சுட்டுக்  கொல்லப்பட்டவர்கள் போக  மற்ற  மூவரும்  தப்பி  ஓடி  விட்டனர். போலீசார்  அவர்களைத்  தேடி வருகின்றனர்.