நஜிப்- எதிர்ப்புக்குழு நடத்திய கருத்துக்கணிப்பில் 89 விழுக்காட்டு மாணவர்களுக்கு நஜிப்பைப் பிடிக்கவில்லை

surபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  எதிர்க்கும்  குழு  ஒன்று  பல்கலைக்கழக  மாணவரிடையே  நடத்திய  கருத்துக்கணிப்பில்  89  விழுக்காட்டினர்  பிரதமரைப்  பிடிக்கவில்லை  என்று  கூறினார்கள்..

சேலெஞ்சர்  என்ற  பெயரைக்  கொண்ட  அக்குழு  5,006  மாணவர்களிடம்  கருத்துக்கணிப்பை  நடத்தியது. அவர்களில்  4,460  பேர்  நஜிப்பை  நேர்மையான  தலைவராக  நினைக்கவில்லை. 304 பேர்  மட்டும்மே  நஜிப்புக்கு  ஆதரவு  தெரிவித்தனர். 242  பேருக்கு  என்ன  சொல்வதென்று  தெரியவில்லை.

4586  பேர்  அல்லது  91.6 விழுக்காட்டினர் நஜிப்  தலைமையில்  செயல்படும்  அரசாங்கத்துக்கு  ஆதரவு  கொடுக்க  முடியாது  என்றனர். 164  பேர்(3.3விழுக்காடு) மட்டுமே  ஆதரவு  தெரிவித்தார்கள்.

“எல்லாருமே  மலேசியர்கள். 18க்கும்  30  வயதுக்குமிடைப்பட்டவர்கள்”, என  சேலெஞ்சரின்  அறிக்கை  கூறியது.