மலாக்காவில் ஜாகீர் சொற்பொழிவுக்கு அனுமதி, ஆனால் தலைப்பில் மாற்றம்

zakilமலாக்காவில் நடைபெறவிருந்து  பின் சர்ச்சைக்குரிய தலைப்பு காரணமாக ரத்துசெய்யப்பட்ட இஸ்லாமிய  ஆன்மிக  பேச்சாளர்  ஜாகீர் நாயக்கின் சொற்பொழிவுக்கு   மீண்டும் அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது.

இதனை துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஜாஹிட்  ஹமிடி தெரிவித்தார்.

இதற்குமுன்  அந்நிகழ்வின்  தலைப்பு  குறித்து   இந்துக்களிடமிருந்து  மட்டுமல்லாமல்  முஸ்லிம்   தலைவர்களிடமிருந்தும்  புகார்கள்  வந்ததால் அது இரத்துச்  செய்யப்பட்டது என்றாரவர்.

இப்போது  அவ்விவகாரத்தில்  அரசாங்கம்  விட்டுக்கொடுக்க  முன்வந்துள்ளது.  ஆனால்  சொற்பொழிவின்  தலைப்பை   மாற்ற  வேண்டும்  என்று  நிபந்தனை  விதிக்கப்பட்டுள்ளது.