ரஹ்மான் டஹ்லான் குவான் எங் மோதல் ஏப்ரல் 19 இல்

rah-limஅமைச்சர்  ரஹ்மான்  டஹ்லானுக்கும்  பினாங்கு  முதல்வர்  லிம்  குவான்  எங்குக்குமிடையில்   ஏப்ரல்  19 இல் டிவி 3-இன் ஏற்பாட்டில்  நடைபெறவிருக்கும்  விவாதத்துக்கு  டிஏபி  தயாராக உள்ளது.

இதனைத்  தெரிவித்த  டிஏபி-இன் அந்தோனி  லோக்,  தேதியை  அப்துல்  ரஹ்மானின்  தனிச்  செயலாளரே  முன்மொழிந்ததாகக்  கூறினார்.

டிஏபி-இன் ஒரே  நிபந்தனை  விவாதம்  நேரடியாக  ஒளிபரப்பப்பட  வேண்டும்  என்பதுதான்.

“அதுவும்  பிரதான செய்திகளுக்குப்  பின்னர்  அதை  நேரலையாக  ஒளிபரப்ப  வேண்டும்”, என  லோக்  தெரிவித்தார்.