1எம்டிபி மீது விசாரணை நடத்த போலீஸ் சிறப்புப் பணிக்குழுவை அமைத்தது

specialபோலீஸ்,  1எம்டிபி  விவகாரம்  குறித்து  புலனாய்வு  செய்ய  சிறப்புப்  பணிக்  குழு  ஒன்றை  அமைத்திருப்பதாக  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்யப்பட்ட  பொதுக்  கணக்குக்குழு (பிஏசி)  அறிக்கையை  ஆராய்ந்த  பின்னர்  போலீஸ்  1எம்டிபி  மீது  மீண்டும்   விசாரணையைத்   தொடங்க  முடிவு  செய்ததாக  ஊடகச்  செய்திகள்  கூறுகின்றன.

1எம்டிபி  தொடர்பில்   போலீஸ்  பலரிடம்  வாக்குமூலம்  பதிவு   செய்திருப்பதாக   காலிட்  கூறினார்.

அதன்  முன்னாள்  தலைமை  செயல்  அதிகாரி  ஷாரோல்  அஸ்ரால்  ஹல்மியும்  விசாரணைக்கு  அழைக்கப்படுவார்  என்றாரவர்.