இடைநீக்கம் செய்யப்பட்ட அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் 1எம்டிபி-இன் செயல்பாடுகள் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பார் என்பதால் இப்போது அது பற்றிக் குறைகூறுவது சரியல்ல.
1எம்டிபி குறித்த முன்னாள் துணைப் பிரதமரின் குற்றச்சாட்டுகளை மறுதலித்த அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் புவாட் ஸர்காஷி, முன்பு முகைதின் மெளனமாக இருந்தது ஏன் என்று வினவினார்.
1எம்டிபி தேவையற்றது என்றே எப்போதும் கூறிவந்ததாக முகைதின் கூறிக்கொண்டிருப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
“2009-இல் 1எம்டிபி அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கிய அமைச்சரவையில் அவரும் இருந்ததை முகைதின் மறந்துவிட்டார்போலும்”, என்றாரவர்.
கூட்டுக் களவாணிகள் என்று இப்படி அப்பட்டமாக மக்கள் முன் அவர்தம் அழுக்குத் துணியை அலசுவது அசிங்கம்.
அவர் ‘இருந்த’ போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது யாருக்குத் தெரியும்?
அவன் இருந்திருந்தாலும் அது அவனுடைய முடிவா? ஏதும் கேட்கத்தான் முடியுமா? அப்படிப்பட்ட கலாசாரமே கிடையாதே– சப்பினால் தானே எல்லாமே இல்லாவிடில் வீட்டுக்குத்தானே போக வேண்டும்?