சரவாக் சட்டமன்றத் தேர்தலில் எதிரணியான டிஏபி 29 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 15 டாயாக் இனத்தவர் பெரும்பான்மையாகவுள்ள இடங்களாகும். வேட்பாளர்களின் பெயர்கள் ஏப்ரல் 20-இல் அறிவிக்கப்படும்.
இதனைத் தெரிவித்த மாநில டிஏபி தலைவர் சோங் சியாங் ஜென், பங்காளிக் கட்சியான பிகேஆர் சில இடங்கள் குறித்து பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தெரிவித்திருப்பது தமக்கு வியப்பளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இடங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்து விட்டது எனத் தாம் நினைத்துக் கொண்டிருந்ததாக சோங் கூறினார்.
முழு சராவக்கிலும் நீங்களே போட்டி போடுங்க! ஏன் பிகேஆர், பாஸ் எல்லாம்?