டிஏபி தலைவர்கள் பலர் சரவாக்கில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கும் வேளையில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அந்தக் கிழக்கு மலேசிய மாநிலத்துக்குச் செல்லத் தீர்மானித்திருக்கிறார்.
பினாங்கு முதலமைச்சருமான லிம், தம் பயணம் பற்றி முன்கூட்டியே அறிவிப்பும் செய்திருக்கிறார். நாளைக் காலை மணி 7.30க்கு ஏர் ஏசியா விமானத்தில் அவர் கூச்சிங் செல்கிறாராம்.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயுவும் உடன் செல்கிறார்.
குடிநுழைவுத் துறை அகப்பக்கத்தைப் பார்த்ததில் முதலமைச்சருக்குப் பயணத் தடை எதுவும் போடப்பட்டிருப்பதாக தெரியவில்லை.
இப்படி தில்லு முள்ளு வேலை செய்துதான் இவன்கள்- ஆட்சியில் இருக்கும் திருட்டு ஜென்மங்கள்- ஆட்சியில் தொடர்ந்து இருக்க முடியும். நாம் எல்லாரும் பேருக்குதான் மலேசியர்கள் — மேற்கு மலேசியர்கள் அங்கு வேண்டப்படாதவர்கள்–
மலேசியா உருவாக்கம் பெறும்போது, சபாவும் சரவாக்கும் நம்முடன் இணையும்போது 20 அமசத் திட்டம் ஒன்று இந்த இரு மாநிலங்களாலும் வரையப்பட்டு அதன் ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தது. அதில் ஒன்றுதான், சபா, சரவா ஆட்சியாளர்கள், மற்ற மாநில மக்களை தங்கள் மாநிலத்தினுள் நுழைய அனுமதி மறுக்க, வகை செய்கிறது. இதை அன்றைய எதிர்கட்சியினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இன்று லோ, லோ, வென கத்துவதில் பிரயோஜனமில்லை. அது மட்டுமல்ல, மவன்[லிம் குவான் எங்] பங்களா விஷயத்தில் மாட்டிக் கொண்டு குழம்பிப் போயிருப்பதால், அவரின் சரவா வரவு, அங்குள்ள டி.எ.பி. கட்சியினருக்கு பிடிக்கவில்லை. மறைமுகமாக அவரின் வரவை பெரும்பாலான டி.எ.பி. கட்சியினரும் விரும்பவில்லை. ஆனால் சரவா பாரிசான்காரர்கள் இவரது வரவை விரும்புகின்றனர். இவரின் வரவால் டி.எ.பி.க்கு சற்று இறங்குமுகமே. சென்ற சரவா தேர்தலில் டி.எ.பி.க்கு 12 இடங்கள் கிடைத்தன. இம்முறை பத்து கூட சந்தேகமே. காரணம், அங்குள்ள அரைவேக்காட்டு தலைவர்களும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கே வாய்ப்பு [சீட்டு] தருவதால், உள்ளுக்குள்ளேயே பெரும் புகைச்சல். சிறி அமானில் [Sri Aman} உண்மையான ஒரு போராட்டவாதி [இபான்காரர்] டி.எ.பி. சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு பிரச்சாரம் செய்ய அங்கே செல்லவுள்ளேன்.
நான் பலமுறை சரவாக் தேர்தல்களுக்கு சென்று வந்துள்ளேன். சரவாக்கியர்கள் தீபகற்ப மலேசியர்களின் பிரச்சாரங்களை அவ்வளவாக விரும்புவதில்லை. இந்த மவன்[லிம் குவான் எங்] சரவாக் போனால், சென்ற தேர்தலில் கிடைத்த வெற்றிகளை காட்டிலும் இரண்டு மூன்று சீட்டுகள் டி.எ.பி.இழக்க நேரிடும். தனது பங்களா விஷயத்தில் செம்மையாக குழம்பிப் போயிருக்கும் இந்த மவன், சரவாக் வருவதை அங்குள்ள டி.எ.பி. யினர் அவ்வளவாக விருப்பம் கொள்ளவில்லை.
ஐயோ அரசியல் சாணக்கியன் அப்புடியுஎ சொல்லிட்டன்
ஐயா anonymous அவர்களே. 20 அம்ச திட்டங்கள் இருந்தது இருக்கிறது உண்மை. ஆனால் அது என்னவென்று எத்தனை பேருக்கு தெரியும்? அத்துடன் அங்கு செல்ல ராணுவத்தினர்க்கும் காவலுக்கும் தான் கடவு சீட்டு தேவை இல்லை முன்பு. மற்றவர்கள் அனைத்துலக கடவு சீட்டு வைத்திருக்க வேண்டும். 90 களில் காக்காதான் அதை அடையாள அட்டைக்கு மாற்றினான். முதலில் டாயாக் -தான் முதல் மந்திரிகளாக இருந்தனர்- பிறகு முஸ்லிம் மிலானாவ் முதல் மந்திரி ஆனான் -அது இன்றும் நடக்கிறது-70-களிலிருந்து. அங்கு கிறிஸ்தவ டாயாக் தான் அதிகமாக இருந்தனர். அப்படி இருந்தும் அரசு வேலைகளிலும் மற்ற வேலைகளிலும் மிலானவ் மலாய் முஸ்லிம் முதலிடம் வகின்றனர். அங்குள்ள மன்னின்மைந்தர்கள் என கூறி எல்லாரையும் சில டாயாக் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் எமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அத்துடன் பெரும்பாலான நீண்ட வீட்டு குடியிருப்போர் அரசிலைப்பற்றி அக்கறை கொள்வது கிடையாது. தேர்தலின் பொது ஒரு தாளும் ஒரு புட்டி சாராயமும் போதும்.
en thaai thamizh , anonymous இருவர் சொல்வது முற்றிலும் உண்மை. அதுமட்டுமல்ல, கடந்த 40 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக தீபகற்ப மலேசியாவில் வாழும் மலாய்க்காரர்களை, அரசு துறை வேலைகளில் சேர்த்து, நிரப்பிவிட்டது பாரிசான் அரசு, குறிப்பாக மகாதிமிர்.