ஹிண்ட்ராப் பேரியக்க அறிமுக நிகழ்ச்சிக்கு சுவராம், பி.எஸ்.எம், அமனா ஆதரவு

Hindraf People's Movement Logoஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் அறிமுகப்படுத்தப்படும் நிகழ்ச்சிக்கு பொதுமக்களிடமிருந்தும், சமூக ஆதரவாளர்களிடமிருந்தும், சில அரசியல் கட்சிகளிடமிருந்தும் நல்லாதரவு கிடைத்துக் கொண்டிருப்பதாக அவ்வியக்கத்தின் தலைமைச் சபை உறுப்பினர்களில் ஒருவரான “புக்கிட் ஜாலில்” பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பதிவு பெற்ற வேதமூர்த்தியின் பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா அமைப்பில் பெரும் பங்காற்றிய முக்கியத் தலைவர்கள் கொள்கை முரண்பாட்டினால் அங்கிருந்து வெளியேறி ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தை தோற்றுவித்துள்ளனர். மற்ற சமுதாய இயக்கங்களோடு இணக்கமான நட்பை ஏற்படுத்தி ஒன்றிணைந்து செயல்பட ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நல்ல வரேவேற்பு கிட்டி வருகிறது என்று அவர் கூறுகிறார்.

இதற்கிடையே எதிர்வரும் ஏப்ரல் 17, 2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு ரவாங், அருள் மிகு அகோர வீரபத்திரர் – சங்கிலிகருப்பர் ஆலய வளாகத்தில் மிகவும் எளிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்க அறிமுக நிகழ்ச்சிக்கு சுவராம் மனித உரிமைக் கழகம், மலேசிய சோசியலிசக் கட்சி (பி.எஸ்.எம்), அமனா தேசிய கட்சி போன்ற இன்னும் சில பொது அமைப்புகளும், பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுவராம் மனித உரிமைக் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் மற்றும் அமனா கட்சியின் தேசியத் தலைவர்களும் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான சவால்களுக்கு ஆளாகியுள்ள மலேசிய இந்தியர்களின் சுபிட்சத்தை முன்னிறுத்தி செயல்பட விரும்பும் அனைத்து நல்லுள்ளங்களும் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்க அறிமுக நிகழ்ச்சிக்கு தயக்கமின்றி வருகையளிக்குமாறு பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார் .

இந்நிகழ்ச்சி தொடர்பான மேல் விவரங்களுக்கு 012 206 5424 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளும்படி தாழ்மையாகவும் பணிவன்புடனும் கேட்டுக்கொவவதாக அவர் தெரிவித்தார்.