சரவாக்கில் தேவாலயத்திற்கும் மசூதிக்கும் நஜிப் நிதி வழங்கினார்

 

Najibdolesகூச்சிங், தாமான் மாளிகாவிலுள்ள இரு வழிபாட்டுத் தலங்கள் – டாருல் ஃபர்ஹான் மசூதி மற்றும் சேப்பல் அங்லிக்கன் – இன்று மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களிடமிருந்து ரிம8 மில்லியனைப் பெற்றன.

பிரதமர் நஜிப் ரிம3 மில்லியனுக்கான மாதிரி காசோலையை டாருல் ஃபர்ஹான் மசூதிக்கும், ரிம1 மில்லியனை சேப்பல் அங்கிக்கனுக்கும் மத்திய அரசின் சார்பில் வழங்கினார்.

சரவாக் முதலமைச்சர் அடெனான் சாதெம்மை பிரதிநிதித்த சராவாக் வீடு மற்றும் சுற்றுப்பயணத்துறை அமைச்சர் அபாங் ஜொஹாரி துன் ஒபெங் ஒரே அளவிலான நிதி உதவியை அவ்விரு வழிபாட்டுத் தலங்களுக்கும் வழங்கினார்.