1எம்டிபிமீது போலீஸ் மேற்கொண்டுள்ள புலனாய்வு எப்போது முடிவடையும் என்பதைச் சொல்வதற்கில்லை என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.
“விசாரணைகள் எப்போது முடியும் என்பதைச் சொல்வது கடினம்.
“இது புது விசாரணை அல்ல. விசாரணையைத் தொடர்கிறோம், அவ்வளவே”, என்றவர் புக்கிட் அமானில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை எப்போது முடிவடையும் என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு விடையளித்தார்.
“முதலில் எங்களை விசாரிக்க விடுங்கள். விசாரணை முடிந்ததும் (விசாரணை அறிக்கையை) சட்டத்துறைத் தலைவரிடம் கொடுப்போம்.
“ஆனால், விசாரணையில் கண்டறிந்தவற்றை வெளியிட மாட்டோம்”, என்றாரவர்.
தலைமைக் கணக்காய்வாளர் மற்றும் பொதுக்கணக்குக் குழு அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விரிவான விசாரணை மேற்கொள்வார்கள் என காலிட் உறுதி கூறினார்.
ஆமாம் சொல்லிவிடாதீர்கள், அப்புறம் சுவாரசியமில்லாமல் போய்விடும்.
புலனாய்வு என்று உங்கள் அகராதியில் இருந்ததே இல்லை எல்லாம் வெறும் கண் துடைபுதானே!பாவத்துக்கு மேல் பாவத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள் போலிஸ் படை தலைவரே…இறைவனிடமிருந்து உங்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு.
Map .nathan இறைவன் என்று ஒருவன் இருந்தால் தானே. ஆண்டவன் ஆகாசமதில் தூங்குகிறானே. இல்லாதவன் மேல் பாரத்தை போட்டு நமக்கு நாமே காதில் பூ சுத்திக்கொல்கிறோம். இந்த நாதாரிகள் எல்லாம் வாயெல்லாம் பல்லாக வங்கிக்கு செல்கிரான்கள்.