ஹிண்ட்ராப் பேரியக்கம்:”நம்மை எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் சிறுபான்மை இனத்தவரின் பிரச்சனைகள் அல்ல, அவை தேசியப் பிரச்சனைகள்”,!

hindraf logoஇந்நாட்டின் இந்தியச் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் ஒரு சிறுபான்மை இனத்தவரின் பிரச்சனைகள் அல்ல. அவை இந்நாட்டு குடிமக்கள் சம்பந்தப்பட்ட தேசியப் பிரச்சனைகள் ஆகும் என்று ஹிண்ட்ராப் பேரியக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் பிரகடனம் செய்யப்பட்டது.

நேற்று, ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் ரவாங், அருள்மிகு அகோர வீரபத்திரர் – சங்கிலி கறுப்பர் ஆலய வளாகத்தில் மாலை மணி 5 அளவில் தொடங்கிய சிறப்பு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

செல்விகள் சிவகாமி, அபிராமி, சுபலக்ஷ்மி, சந்திரமுகி ஆகியோர் தேவாரம் பாட, திருமதி லூர்து மேரி குத்து விளக்கேற்றி வைக்க ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் தோன்றியது. “எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற பாரதிதாசனின் பாடல் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தின் எழுச்சிப் பாடலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் இந்நிகழ்ச்சியில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

சிறப்பு வருகையாளர்களாக சுவாரம் மனித உரிமைக் கழகத்தின் தலைவர் கா.ஆறுமுகம், sambu launching (2)செம்பருத்தி ஆசிரியர் ஜீவி காத்தையா, தொழிற்சங்கவாதி கந்தசாமி, வரலாற்று ஆய்வாளர் ஜானகி ராமன், அமானா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முஹமட் அனுவார் தாகிர் மற்றும் அக்கட்சியின் வியூக, திட்டமிடல் இயக்குனர் டாக்டர் சுல்கிப்லீ ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், பார்வையாளராக ஜொகூர் மாநிலத்திலிருந்து சஹாபாட் ராக்யாட் அமைப்பிலிருந்து ஐவர் வந்திருந்தார்கள்.

mary launcingஹிண்ட்ராப் மக்கள் பேரியக்க தலைமைச் சபை உறுப்பினர் ரமேஷ் மற்றும் பொருளாளர் ஷான், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்

.ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்க அமைப்பாளர்களில் ஒருவரான “புக்கிட் ஜாலில்” பாலகிருஷ்ணன் வரவேப்புரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து உரையாற்றிய வி. சம்புலிங்கம் இவ்வியக்கம் தோற்றம் காண வேண்டிய அவசியத்தையும், காலத்தின் கட்டாயத்தையும் வலியுறுத்தி சமூக, பொருளாதார சவால்களை எதிர்நோக்கி இருக்கும் மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகளை ஒரு சிறுபான்மையினரின் பிரச்சனை என்றோ இந்திய வம்சாவளியினரின் உள்ளக் குமுறல் என்றோaru launching ஒரு சிறுவட்டத்திற்குள் அடக்கிவிடாமல் மலேசிய குடிமக்கள் எதிர்நோக்கும் சவாலாக் கருதி அவற்றை ஒரு தேசியப் பிரச்சனையாக எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய கா. ஆறுமுகம் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் அறிமுகமாகும் இந்த நிகழ்ச்சி அனைவரும் பெருமைப்பட வேண்டியது என்றும், ஒரு புது உத்வேகத்துடன் இவ்வியக்கம் செயல்படும் என்றும், உண்மையான தர்ம போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் கூறினார்.

முஹமட் அனுவார் தாகிர் ஹிண்ட்ராப் மக்கள் இயக்கத்தின் தோற்றத்தை எவ்விதத் தயக்கமும் இன்றி அமானா கட்சி அங்கீகரிப்பதாகவும், இந்தியச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களைக் களைவதற்கு அமானா என்றும் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்திற்கு பக்கபலமாய் நிற்கும் என்றும் வாக்காளித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய டாக்டர் சுல்கிப்லீ தேசிய அளவில் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் தீவிரமாக செயல்பட வேண்டிய காலம் mohd anuar tahirநெருங்கி விட்டதாகவும், மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் சவால்களை நிச்சயமாக இன வட்டத்துக்குள் அடைக்க முடியாதென்றும், அது ஒரு தேசியப் பிரச்சனை என்ற உண்மையை தாமும் தமது கட்சியும் அமோதிப்பதாகவும் அதற்கு ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தின் பங்களிப்பு வெகு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

இறுதியாக பேசிய தலைமைச் சபை உறுப்பினர் நா.கணேசன், ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தின் தோற்றம் தவிர்க்க முடியாதது என்றும், கடந்த காலங்களில் நிகழ்ந்த தலைமைத்துவ தவறுகளுக்குப் புதிய கட்டமைப்பு இடம் கொடுக்காது என்றும், தொடர்ந்து மக்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு களத்தில் இறங்கி தீர்வு காணப்படும் என்றும், தீர்க்கப்பட வேண்டிய அவலங்கள் நிறைய உள்ளன என்றும், தொடர்ந்து பல அமைப்புகளோடு இணைந்து இந்தியச் சமூகம் பலனடையும் காரியங்களில் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் தீவிரம் காட்டும் என்றும் உறுதியளித்தார்.

மிக அமைதியாகவும். எளிமையாகவும் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த அறிமுக நிகழ்ச்சி ஆதாரவாளர்களின் உற்சாக கரவொலி ஓசையோடு இனிதே ஒரு நிறைவிற்கு வந்தது.