பெசுட் அம்னோ இளைஞர், புத்ரி பிரிவுகளும் அரசுசார்பற்ற அமைப்புகள் பலவும், ஏப்ரல் 19, 20 தேதிகளில் பெசுட் அருகில் பூலாவ் பெர்ஹெந்தியான் கிச்சிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவுக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளன.
‘பெளர்ணமி விழா’ என்று அழைக்கப்படும் அவ்விழா பூலாவ் பெர்ஹெந்தியான் கிச்சிலின் லோங் பீச்சில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெசுட் அம்னோ இளைஞர் இயக்கத் தலைவர் அசிசுல் ஜஸ்மி கூறினார்.
விழா நடத்தக் கொடுக்கப்பட்டிருக்கும் அனுமதி மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்றாரவர்.
“வழக்கமாக இப்படிப்பட்ட விழாக்களில் மது அருந்தப்படும், ஆண்களும் பெண்களும் கட்டுமீறிப் பழகுவார்கள், இறுதியில் அது கட்டுபாடற்ற பாலுறவுக்கும் இட்டுச் செல்லும்”, என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெசுட் அம்னோ புத்ரி இயக்கத் தலைவர் எர்னிசால்வினி சைடி, அது போன்ற விழாக்கள் உள்ளூர் கலாச்சாரத்துக்கும் இஸ்லாமிய போதனைகளுக்கும் ஏற்புடையவை அல்ல என்றார்.
“இப்படிப்பட்ட விழாக்கள் இதற்குமுன் பூலால் பெர்ஹெந்தியானில் நடந்ததில்லை. இது மாநிலத்தில் புதியதொரு கலாச்சாரமாக உருவெடுப்பதைத் தடுக்க வேண்டும்”, என்றார்.
தமிழன் எந்த விஷயத்துக்கு எங்கு கூடினாலும் தண்ணி அடிக்காம இருக்க மாட்டான்னு அம்னோகாரன் மட்டும் அல்ல.ஒட்டு மொத்த எல்லா இனமும் அப்படித்தான் எடைபோடுகிறது.குடிகார இனம் என்று நம் இனத்துக்கு எப்போதோ முத்திரை குத்தப்பட்டுவிட்டது.அதற்கு தகுந்த மாதிரிதான் நம் இன இளைஞர் பட்டாளம் நடந்துகொள்கிறது.மற்ற இனத்துக்கு முன்னாடி கையும் போத்தலுமாக நாகரீகமற்ற வகையில் நடந்து நம் இனத்தின் மானத்தையே வாங்குகிறார்கள்.கெவ்ரவமாக,நாகரீகமாக நடந்துகொண்டிருந்தால் மலாய்காரன் இந்த எதிர்ப்பை தெரிவித்து இருப்பானா?எல்லாம் நாம் வாங்கி வந்த வரம் ஐயா .