சிஐஎம்பி தலைவர் நசிர் ரசாக், யுஎஸ்$7 மில்லியன் விவகாரம் மீது விசாரணை நடப்பதற்கு இடமளித்து தாம் விடுப்பில் செல்வதை உறுதிப்படுத்தினார்.
தாம் சிஐஎம்பியில் இருப்பது விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கலாம் என்று அஞ்சுகிறார் அவர்.
வங்கியின் நேர்மையைக் காப்பதற்கு அதைவிட்டு விலகியிருப்பதே நல்லது என்று நினைக்கிறார்.
முன்னதாக ஏர் ஏசியா தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ், தம் நெருங்கிய நண்பரான நசிர் விடுப்பில் செல்லவிருப்பதாக சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அது “பாராட்டத்தக்க செயல்” என்றும் அவர் வருணித்திருந்தார்.
கடந்த மாதம் நசிர், தம் சகோதரரான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து யுஎஸ்$7 மில்லியன் கிடைக்கப் பெற்றதாகவும் அப்பணம் கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும்கட்சி அரசியல்வாதிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டதாகவும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவ்விவகாரத்தில் தவறு எதுவும் நடந்திருப்பதாக அவர் நினைக்கவில்லை.
//வங்கியின் நேர்மையைக் காப்பதற்கு அதைவிட்டு விலகியிருப்பதே நல்லது//
நல்ல கொள்கை, பாராட்டுக்கள்
ரசாக்கின் மைந்தா பாராட்டுகள். இப்படித்தான் தலைவர்கள் இருக்க வேண்டும். ஆனால் , உன் சகோதர்ர் அப்படி இல்லையே.! முதல் மந்திரியானலும், பிரதமரானலும் சட்டம் ஒழுங்கு ஒன்றுத்தான். ஆனால் எவன் காதில் போட்டுகிறான். முதல் அமைச்சர் மில்லியனை முழுங்கினா, பிரதமர் பில்லியனை முழுங்குறான்.
அடே மடையா…………….