1எம்டிபி நிறுவனத்தின் இயக்குனர்கள் பதவிவிலக முன்வந்திருப்பதை அரசாங்கம் உடனடியாக ஏற்க வேண்டும் என்று மலேசியாவைப் பாதுகாப்போம் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
1எம்டிபி-யுடன் செய்துகொள்ளப்பட்ட ஒரு மீட்பு நடவடிக்கை ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதாக அபு டாபியைத் தளமாகக் கொண்டு செயல்படும் அனைத்துலக பெட்ரோலிய முதலீட்டு நிறுவனம்(ஐபிஐசி) அறிவித்திருப்பதை ஊழல் எதிர்ப்பு மையமான சி4-வின் இயக்குனர் சிந்தியா கேப்ரியல் சுட்டிக்காட்டினார்.
“அந்த அறிவிப்பு 1எம்டிபி இயக்குனர்கள் அவர்களின் கடமையைச் செய்யத் தவறி விட்டனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
“நம்பி ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றத் தவறிய 1எம்டிபி-இன் அத்தனை இயக்குனர்களும் பதவி விலக முன்வந்திருப்பதை அரசாங்கம் ஏற்பது அவசியமாகும்”, என்றாரவர்.
1எம்டிபி நிர்வாகத்தில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக பிஏசி அறிக்கை வலியுறுத்தியதை அடுத்து 1எம்டிபி இயக்குனர் வாரியம் ஏப்ரல் 7-இல் ஒட்டுமொத்தமாக பதவி விலக முன்வந்தது.