ரிபோர்மாசியை நினைத்துப் பாருங்கள்: மகாதிரைக் குறைகூறுவோருக்கு தியான் சுவா பதிலடி

tian1990-களின்  இறுதிப்  பகுதியில்  ரிபோர்மாசி  காலத்தின்போது  பலமுறை  சிறைக்குச் சென்று  வந்துள்ள  பிகேஆர்  உதவித்  தலைவர்  தியான்  சுவா,  அப்போது  நடந்ததைப்  பாருங்கள்   என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டைக்  குறைகூறுவோரை  நோக்கிக்  கூறினார்.

இன்று  ஒரு  பொதுவான  இலக்கின்  காரணமாக  பல்வேறு  கட்சிகளையும்  சேர்ந்தவர்கள்  ஒன்றுபட்டிருப்பதுபோல்  அன்று  அன்வார்  இப்ராகிம்  பதவி  விலக்கப்பட்டது  பல  கட்சிகளைச்  சேர்ந்தவர்களையும்  ஒன்றுபடுத்தியது.

“பழையவர்கள் ரிபோர்மாசியின்  வரலாற்றை  நினைத்துப்  பார்க்க  வேண்டும்……அது  எந்தக்  கட்சியுடனும்  தொடர்பு  கொண்டதல்ல.  மக்கள்  அரசியலில்  பழிவாங்கப்பட்ட அன்வார் இப்ராகிமைப் பாதுகாக்கத்  திரண்டெழுந்தனர்.

“உரிமைக்காகவும்  நீதிக்காகவும்  போராடியவர்கள்  பாஸ்,  டிஏபி, அம்னோ  போன்ற  பல்வேறு  கட்சிகளையும்  சேர்ந்தவர்கள்”, என்றாரவர்.

பிகேஆர்   கட்சியினர்  உள்பட  மகாதிரைக்  குறைகூறுவோருக்கு  எதிர்வினையாற்றியபோது  தியான்  சுவா  இவ்வாறு  கூறினார்.