பிஏசி-இடம் பொய்யுரைத்தவர்கள் சிறையிடப்படலாம்

liedபொதுக்  கணக்குக்  குழுவிடம்  பொய்  சொன்னவர்களுக்கு  மூன்றாண்டுகள்வரை  சிறைத்  தண்டனை  விதிக்கப்படலாம்  என  செலாயாங்  எம்பி  வில்லியம்  லியோங்  கூறினார்.

நாடாளுமன்ற (அதிகாரம், சலுகைகள்) சட்டம்   பிரிவு  20,  நாடாளுமன்றத்திடம்  அல்லது  நாடாமன்றக்  குழுவிடம்  பொய்ச்  சாட்சியம்  கூறுவோரை  குற்றவியல்  சட்டத்தின்கீழ்  குற்றம்  சாட்ட  வகை  செய்கிறது  என  அந்த  பிகேஆர்  எம்பி  கூறினார்.

ஆபார்  நிறுவனத்துடன்   தனக்குத்  தொடர்பில்லை  என்று    அனைத்துலக  பெட்ரோலிய  முதலீட்டு  நிறுவனம் (ஐபிஐசி)  அறிவித்திருப்பது  குறித்து  அவர்  கருத்துரைத்தார்.

“தலைமைக்  கணக்காய்வாளரிடமும்  பிஏசி-இடமும்  சாட்சியம்  அளித்தவர்கள்  உண்மையைச்  சொல்லவில்லை”, என  பிஏசி  உறுப்பினருமான  லியோங்  கூறினார்.

“ஐபிஐசி-இன்  அறிவிப்பு  தலைமைக்  கணக்காய்வாளரிடமும்  பிஏசி-இடமும்  சாட்சியம்  அளித்தவர்கள்  முக்கியமான  தகவலை  மறைத்து  பொய்ச்  சாட்சியம்  அளித்தார்கள்  என்பதைக்  காட்டிக்  கொடுத்து  விட்டது”, என்று அவர்   நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.