குளிர்சாதன வசதிக்கு ரிம10 கட்டணமா? உணவகத்தை அமைச்சு விசாரிக்கிறது

receiptகுளிர்சாதன  வசதிக்காக  ரிம10  கட்டணம்  வசூலித்த  கோலாலும்பூர்  உணவகத்தை  உள்நாட்டு  வாணிக,  கூட்டுறவு, பயனீட்டாளர்  விவகார  அமைச்சு  விசாரிக்கிறது. குளிர்சாதன  வசதிக்கு  உணவகம்  கட்டணம்  வசூலித்ததைக்    காண்பிக்கும்  ரசீதை  ஒரு  வாடிக்கையாளர்  ஒருவர்  சமூக  ஊடகங்களில்  பதிவிட்டிருந்ததை  அடுத்து  அமைச்சு  நடவடிக்கையில்  இறங்கியது.

ரசீதைத்  தயார்  செய்யும்போது  தவறு  நிகழ்ந்திருக்கலாம்  என்பதை  உணவகம்  ஒப்புக்கொண்டதாக  அமைச்சர்  ஹம்சா  சைனுடின்  கூறினார்.

குறிப்பிட்ட  நிகழ்வுகளுக்காக  அல்லது தனிமை  வேண்டும்  என்பதற்காக  தனி  அறைகளை  முன்பதிவு  செய்யும்  வாடிக்கையாளர்களிடம்  குளிர்சாதன  வசதிக்கும்  சேர்த்து  கட்டணம்  வசூலிக்கப்படுவது  அந்த  உணவகத்தின்  வழக்கம்  என்றாரவர்.  அப்படிச்  செய்யும்போது  அது  பற்றி  முன்கூட்டியே  வாடிக்கையாளர்களுக்குத்  தெரிவிக்கப்படும்.

“அது  பற்றி  முன்கூட்டியே  வாடிக்கையாளர்களுக்குத்  தெரியப்படுத்தி  விட்டால்  அது  குற்றமாகாது.

“இந்த  விவகாரத்தில்  வாடிக்கையாளர்  அப்படிப்பட்ட  அறையில்  உணவு  அருந்தினாரா  அல்லது  அதற்கு  வெளியிலா  என்பது   தெரியவில்லை. அவரை  இன்னும்  சந்திக்கவில்லை”, என்று  அமைச்சர்  கூறினார்.