தேர்தல் காலத்தில் இனவாதம் உச்சக்கட்டம் அடைகிறது, பிடிஎன் தலைவர்

btnமலேசியாவில்  தேர்தல்  காலங்களில்  இனவாதம்  தலைவிரித்தாடத்  தொடங்கி  விடுகிறது  என்கிறார்  தேசிய  குடிமையியல்  பிரிவுத்  தலைவர்  இப்ராகிம்  சாஆட்.

நேற்றிரவு  ஷா ஆலாமில்  கருத்தரங்கு  ஒன்றில்  பேசிய  அவர், 1970, 80-களுடன்  ஒப்பிட்டால்  இப்போது  இனவாதம்  அவ்வளவு  மோசமாக  இல்லை  என்றார்.

“தேர்தல்களின்போதுதான்  பிரச்னை. சில  தரப்புகள்  அரசியல்  அதிகாரத்தைப் பெருக்கிக்கொள்ள உணர்ச்சிவசப்பட வைக்கும்  விவகாரங்களைக்  கையில்  எடுத்துக்  கொள்கிறார்கள்”,  என்றார்.

ஆனாலும், மலேசியர்கள் இப்போது  முதிர்ச்சி அடைந்தவர்களாக  விளங்குகிறார்கள்  என்று  இப்ராகிம்  கூறினார்,  இணைய  அறிவு  அவர்களைப்  பக்குவப்படுத்தியுள்ளது.