சரவாக் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் சரவாக் விவகாரங்களை வைத்துதான் களமிறங்க வேண்டுமே தவிர 1எம்டிபி முறைகேடுகளையும் மற்ற தேசிய விவகாரங்களையும் கொண்டுவரக் கூடாது என மாநில பிஎன் தலைவரும் முதலமைச்சருமான அடுனான் சாதேம் கூறுகிறார்.
“எதிரணிகளுக்கு, குறிப்பாக டிஏபிக்குச் சவால் விடுக்கிறேன்: தேசிய விவகாரங்களை சரவாக் கொண்டுவர வேண்டாம், சரவாக் விவகாரங்களை வைத்தே என்னுடனும் என் குழுவுடனும் மோதத் தயரா. 1எம்டிபி போன்ற தேசிய விவகாரங்களைக் கொண்டு சரவாக் பிஎன்னைத் தாக்காதீர்கள். அந்த விவகாரங்களுக்கும் சரவாக்குக்கும் தொடர்பில்லை”, என்று அடுனான் கூறியதாக த ஸ்டார் தெரிவித்தது.
கூட்டனி வேண்டும் ஆனால் கூட்டாளியுடைய பிரச்சனை வேண்டாம். இதுதான் இடத்திற்கு ஒரு வேஷம் போட்டு மக்களை ஏமாற்றும் கூட்டனி.
இவனெல்லாம் உட்கார்ந்து கொண்டு தின்று திளைத்தவன்கள்– எப்படி சொகுசு வாழ்கையை விட்டு கொடுக்க முடியும்– எல்லாம் இரத்தத்தில் ஊறி விட்டது. இதெல்லாம் இப்படியே தான் இருக்கும் — எப்படியாவது அதிகாரத்தை தங்களின் கையில் வைத்திருக்கவே எல்லாம்.
வணக்கம். ஏன் 1எம்டிபியில் சரவாக்கின் பணம் இல்லையோ. வெறும் சிலாங்கோர் பினாங்கு பணம் மட்டுமே உள்ளதோ.
வயசானால் அறிவு கொஞ்சம் மங்கி விடுமோ? 1MDB சரவாக் பிரச்சினை இல்லை. அது இங்கே வேண்டாம் என்கிறார் சரவாக் முதல்வர். அப்படியானால், பாரிசான் பயன்படுத்தும் நிறுவைச் சின்னம் தீபகற்ப மலேசியாவில் பயன்படுத்தும் சின்னம். இந்த முதல்வருக்குத் துணிவிருந்தால், அந்த பாரிசானின் நிறுவைச் சின்னத்தை தூக்கி எறிந்துவிட்டு, தனது மாநிலத்தின் PBB சின்னத்தில் போட்டியிடும் துணிச்சல் உண்டா? சிந்தித்து பேசும் தன்மையே உங்களுக்கு கிடையாதா?
மட பேச்சு அட்னன்
சரவாக்கில் தகுதியான தலைவர் இல்லையாம்.அதனால் இவரே ketua mentri யாக இருக்க மக்கள் விரும்புகிறார்களாம்.
முன்னாள் இந்நாள் முதல்வரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே பாவப்பட்ட சரவாக் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து கொண்டிருக்கிறார்கள் சரவாக் மக்களே விழிதெல வேண்டும் இல்லையேல் நீங்கள் அதோ கதிதான்
சரவாக் தனி மாநிலமா அல்லது மலேசியாவை சேர்ந்ததா குழப்பமாக இருக்கிறது $$$$$$$$$????????????
சரவாக் மலேசியாவை சேர்ந்ததே ஆனாலும் இல்லை. அவர்களின் 20 அம்ச ஒப்பந்தம்— ஆனால் எனக்கு என்ன என்று தெரியாது.
முதலமைச்சரே!மலேசியாவுடன் தொடர்ந்து கூட்டணியில் இருக்கவேண்டுமா!வேண்டாமா!என்பதை சரவாக் மக்கள் திறந்த மனதுடன் தீர்கமான முடிவு எடுக்க வேண்டும்